Abstract:
ஒரு நாடு நிலைத்து நிற்கக்கூடிய நீண்டகால பொருளாதார அபிவிருத்தியை அடைவதற்கு
பொருளாதார வளர்ச்சியுடன் சமூக முன்னேற்றங்களும் ஏற்படவேண்டும் என்பது பொதுவாக
எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மையாக காணப்படுகின்றது. இலங்கையில்
சுதந்திரத்தைத் தொடர்ந்து தொடர்ச்சியாக மாறிமாறி பதவிக்கு வந்த அரசாங்கங்கள்
யாவம் நாட்டின் நலன் கருதி சமூக பொருளாதார முன்னேற்றத்தில் கூடிய கவனம் செலுத்தி
வந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இதன்பின்னணியில், இவ்வாய்வின் பிரதான நோக்கம்
இலங்கையின் தற்போதைய சமூக-பொருளாதார நிலைமைகளை ஏனைய அங்கத்துவ
சார்க் நாடுகளுடன் ஒப்பிட்டு விளக்குவதாக அமைகின்றது. இரண்டாம் நிலைத்தரவுகளைப்
பயன்படுத்தி இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், சேகரிக்கப்பட்ட தரவுகள் யாவும்
பண்புசார் ஆய்வுக்குட்படுத்தபட்டுள்ளன. ஆய்வின் முடிவிற்கிணங்க சுதந்திரத்தின் பின்னர்
இலங்கையை ஆட்சி செய்த அரசாங்கங்கள் சமூக பொருளாதார அபிவிருத்தியில் கவனம்
செலுத்தியதன் விளைவாக இன்று இலங்கை ஏனைய அங்கத்துவ சார்க் நாடுகளுடன்
ஒப்பிடும் போது பொருளாதார முன்னேற்றங்களை விடவும் சமூக முன்னேற்றங்கள் மிகவும்
திருப்தியளிக்க்கூடியதாக காணப்படுகின்றன. இந்நிலையை தொடர்ச்சியாக பேணி
பின்பற்றப்படும் பட்சத்தில் மாத்திரமே பொருளாதார அபிவிருத்தி அடைந்த நாடுகளை
ஓரளவுக்காவது அண்மிக்க முடியும். ஆகையால் தற்போதைய அரசு மாத்திரமன்றி ஆட்சியை
தொடரும் எந்தவொரு அரசாங்கமும் இவ்விடயத்தில் கவனத்தை ஈர்ப்பது அவசியமாகும்.