Abstract:
இலங்கையில் யுத்தத்திற்குப் பின்னரான சூழ்நிலையில் பல்வேறு மாற்றங்கள்
ஏற்பட்டுவருவதனை அவதானிக்கமுடிகின்றது. அந்த வகையில் மக்களின் உளப்பாங்கு மாற்றம்,
இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம் என்பன முக்கிய விடயங்களாக உள்ளன. கடந்த
யுத்த சூழலின் போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலிருந்து மக்கள் இடம்பெயர்ந்து
வாழ்ந்தனர். இத்தகையதொரு பின்னணியிலேயே மட்டக்களப்பு மாவட்டத்தில் செங்கலடிப்
பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள உறுகாமம் எனும் கிராமத்தில்
வாழ்ந்துவந்த முஸ்லிம் மக்கள் கடந்த யுத்த சூழலின் போது அகதிகளாக
வெளியேற்றப்பட்டனர். தற்போதய சூழலில் இம்மக்களின் மனோநிலையில் பல்வேறு
மாறுதல்கள் ஏற்பட்டுள்ளன. இந்தவகையில் குறித்த பிரதேச மக்களின் உளநிலை மாற்றம்
மற்றும் மீள்குடியேற்றம் குறித்து இவ்வாய்வு கவனம்செலுத்துகின்றது.