Abstract:
இக்கட்டுரை கிழக்கிலங்கையில் யுத்தத்துக்குப் பின்னரான சமாதானத்தினைக் கட்டியெழுப்புதல்
செயன்முறையில் சர்வதேச செயற்பாட்டாளர்கள் இலங்கை அரசுடன் இணைந்து மேற்கொண்ட
பங்களிப்புக்கள் குறித்து மீள் வாசிப்புச் செய்கின்றது. யுத்தகாலத்தின் போது கிழக்கின்
மக்களும் பௌதீக வளங்களும் கடுமையான பாதிப்புக்களுக்குள்ளாக்கப்பட்டிருந்தன. எனினும்
யுத்தத்துக்குப் பின்னர் ஆயுதக் களைவு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம், மீள்கட்டுமானம்,
ஏனைய இதர அபிவிருத்திச் செயன்முறைகளை மேற்கொள்வதற்கு சிறந்த சூழல்
உருவாக்கப்பட்டது. எனினும் மட்டுப்படுத்தப்பட்ட அடிப்படையிலேயே சர்வதேச சமூகத்தின்
பங்களிப்பு இப்பிரதேசத்தில் இடம்பெற்று வந்திருப்பதனை இவ்வாய்வு வெளிப்படுத்துகின்றது.
அதேவேளை அதிகரித்த அரச தலையீடும் யுத்தம் முடிவுற்று குறுங்காலத்தினுள் சர்வதேச
நிறுவனங்கள் இப்பிரதேசத்தை விட்டு வெளியேறியமையும் சமாதானத்தினைக் கட்டியெழுப்புதல்
செயன்முறையின் வெற்றிகரத் தன்மையினைப் பாதிப்புறச் செய்துள்ளது.