Abstract:
நீதி, நீதிப் பரிபாலனம் என்பன இஸ்லாத்தில் மிக முக்கிய கூறுகளாகும். எனவே, நீதிமன்றம் எனும்
நிருவனப்படுத்தல் ஊடாகவே இஸ்லாமிய வரலாற்றில் நீதிப் பரிபாலனம் செய்யப்பட்டுள்ளது. எனவே, இஸ்லாத்தின் முன்னோடிக் காலம் முதல் நீதித்துறையின் பரிபாலன ஒழுங்கு, கட்டமைப்பு, அது பெற்ற பரிணாம வளர்ச்சி என்பவற்றைப் பரிசீலித்தலை இவ்வாய்வு இலக்காகக் கொண்டுள்ளது. பண்புசார் முறைமையிலான இவ்வாய்வு இஸ்லாமிய வரலாற்றில் நீதிப் பரிபாலனம் பற்றிய ஆக்கங்கள் மீதான மீளாய்வு, பகுப்பாய்வினை அடிப்படைகளாகக் கொண்டுள்ளது. எனவே, இஸ்லாமிய நீதிப் பரிபாலனம், பல்வேறு ஒழுங்கமைப்புகளைக் கொண்ட நீதிமன்ற கட்டமைப்பைப் பெற்றிருந்தது என்பது இவ்வாய்வின் பிரதான கண்டறிதலாகும். இதனால், இவ்வாய்வை தற்கால காழி நீதிமன்ற முறைமையின் சிறந்த கட்டமைப்பிற்கான அல்லது மீள் புனர்நிர்மானத்திற்கான வழிகாட்டியாகக் கொள்ளலாம்.