Abstract:
இக்கட்டுரையானது சிக்மன்ட் பிரொய்டின் உளப்பகுப்பாய்வு அணுகுமுறை குறித்த பிரச்சினையை
பகுப்பாய்வு செய்வதாக அமைகின்றது. உளப்பகுப்பாய்வு நரம்பு நோய்கள் அல்லது உளப் பிணி
காரணமாக நோயாளியின் மனதில் மறைந்து போன அல்லது மறைந்து போன எண்ணக்கருக்களை
தேடுவதன் மூலம் வெளிக் கொணரப்படும் சிகிச்சை முறை என்று கூற முடியும். நனவு, நனவிலி
என உளத்தைப் பகுத்து, மனித நடத்தைகள் அனைத்துக்கும் நனவிலியுளமே அடித்தளமாகும் எனும்
கருதுகோளின் அடிப்படையில் உளப்பகுப்பாய்வு செயற்படுகிறது இவ்வாய்வின் நோக்கம்,
உளப்பிரச்சினை தோன்றுவதற்கு பிரொய்ட் அடையாளப்படுத்தும் அடிப்படைக் காரணியைக்
கண்டறிதல், உளச்சிகிச்சையில் உளப்பகுப்பாய்வு அணுகுமுறை எவ்வாறு பிரயோகிக்கப்படுகிறது
என்பதையும் அதில் பயன்படுத்தப்படும் முறைகளையும், நுட்பங்களையும் விளங்கிக் கொள்ளல்,
உளப்பகுப்பாய்வுக் கோட்பாடு மற்றும் உளப்பகுப்பாய்வு உளச்சிகிச்சை எதிர்கொள்ளும்
விமர்சனங்களை அடையாளப்படுத்துதல் போன்றனவும் தொடர்புபடுத்தி இதில் ஆராயப்படுகின்றது
இவ்வாய்வானது கோட்பாட்டு ரீதியானதும், பிரயோக ரீதியானதுமான ஆய்வாகவுள்ளது இதன்
சிறப்பம்சமாகும். இவ்வாய்விற்கான தரவுகள் நூல்கள், ஆய்வுக்கட்டுரைகள், இணையத்தளங்கள்
போன்றவற்றிலிருந்து பெறப்பட்டன. நனவிலி மனதில் அடக்கி வைக்கப்படும் எண்ணங்களே
உளநோய்களுக்குக் காரணமாகின்றன என்பதும் அத்தகைய எண்ணங்களை, உளப்பகுப்பாய்வு
பயன்படுத்தும் கனவுப் பகுப்பாய்வு போன்ற முறைக;டாக வெளிக்கொணரலாம் என்பதும்
இவ்வாய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.