dc.contributor.author |
Selvanayagam, Vasanthakumary |
|
dc.date.accessioned |
2016-12-30T10:02:49Z |
|
dc.date.available |
2016-12-30T10:02:49Z |
|
dc.date.issued |
2015-08 |
|
dc.identifier.citation |
Kalam, Research Journal of Faculty of Arts and Culture. Volume IX (II). pp 86-102. Issue-II. August, 2015 |
en_US |
dc.identifier.issn |
1391- 6815 |
|
dc.identifier.uri |
http://ir.lib.seu.ac.lk/handle/123456789/2053 |
|
dc.description.abstract |
அனர்த்த முகாமைத்துவ செயன்முறையில் பாடசாலையினை அடிப்படையாகக் கொண்ட அனர்த்த அபாயநிலை குறைப்பானது முக்கிய அங்கமாக மாறிவருகின்றது. இலங்கையில் பாடசாலை கல்வி முறைமையினுள் DRR இனை ஒன்றிணைப்பதற்கான முயற்சிகள் பல கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளன. எனினும் அதிகரித்து வரும் அனர்த்த நலிவுறு நிலையானது கல்வித் துறையில் DRR யினை முதனிலைப்படுத்துவதற்கான தேவையினை ஏற்படுத்தியுள்ளது. அவ்வகையில் இவ் ஆய்வானது தற்போதைய பாடசாலை கல்வி முறைமையில் DRR எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் DRR இனை முதனிலைப்படுத்துவதற்கான வழிமுறைகள் தொடர்பாக ஆராய்வதனை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்நோக்கங்களை அடைவதன் பொருட்டு முதலாம் மற்றும் இரண்டாம் நிலை தரவுகளை பயன்படுத்தி இவ் ஆய்வானது மேற்கொள்ளப்பட்டுள்ளது. அனர்த்த அபாயப் பகுதிகளில் அமையப் பெற்றுள்ள 4 பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டு எதிர்கொள்ளப்படும் பிரச்சினைகள் இணங்காணப்பட்டன. ஆய்வின் பெறுபேறுகளின் அடிப்படையில் தற்போதைய கல்வி முறைமையினுள் DRR ஒன்றிணைக்கப்பட்டதன் அடிப்படை நோக்கங்களுள் பாடசாலை கலைத்திட்டத்தில் அனர்த்தம் தொடர்பான எண்ணக்கருக்களை ஒன்றிணைத்தலில் மாத்திரமே குறிப்பிடத்தக்க வெற்றியினை அடைந்துள்ளது. அதன் பிரயோக ரீதியான பயனை அடைவதில் பல்வேறு சவால்கள் எதிர்நோக்கப்படுகின்றன. மாணவர்கள் அனர்த்தம் தொடர்பான அடிப்படை எண்ணக்கருக்களை அறிந்துள்ள போதும் DRR தொடர்பிலான அறிவு மற்றும் விழிப்புணர்வு இன்னும் குறைவாகவே காணப்படுகின்றது. அத்துடன் பாதுகாப்பான பாடசாலை (Safety School) மற்றும் பாடசாலை அனர்த்த முகாமைத்துவ திட்டங்கள் (School Disaster Management Plan) ஆகியன பின்னடைவான நிலையிலேயே உள்ளது. குறிப்பாக DRR இற்கு குறைவான முக்கியத்துவம் உள்ளூர் அனர்த்த அபாயநிலை பற்றி போதிய விழிப்புணர்வு இன்மை, வளப்பற்றாக்குறை ஆகியன முக்கிய பிரச்சினைகளாக இவ் ஆய்வில் இணங்காணப்பட்டன. இதன் அடிப்படையில் கல்விமுறைமையில் DRR இனை முதனிலைப்படுத்துவதற்கு DRR யினை கலைத்திட்டத்தில் முதனிலைப்படுத்தல், எல்லா மட்டங்களிலும் DRR இற்கான முக்கியத்துவத்தினை அதிகரித்தல், உள்ளுர் அனர்த்த அபாயநிலை தொடர்பில் அதிக கவனம் செலுத்தல், பாடசாலை அனர்த்த முகாமைத்துவத்து திட்டங்களை கட்டாயமாக்குதல் ஆகியன முக்கிய வழிமுறைகளாக இவ் ஆய்வில் முன்வைக்கப்பட்டுள்ளன. |
en_US |
dc.language.iso |
en |
en_US |
dc.publisher |
Faculty of Arts and Culture, South Eastern University of Sri Lanka |
en_US |
dc.subject |
முதனிலைப்படுத்தல் |
en_US |
dc.subject |
அனர்த்தம் |
en_US |
dc.subject |
அபாயநிலை குறைப்பு |
en_US |
dc.subject |
பாடசாலைக் கல்வி முறைமை |
en_US |
dc.title |
பாடசாலை கல்வி முறைமையில் அனா்த்த அபாயநிலை குறைப்பினை முதனிலைப்படுத்தல் |
en_US |
dc.title.alternative |
ஒரு முன்னோக்கிய நகர்வு |
en_US |
dc.type |
Article |
en_US |