Abstract:
போா்த்துக்கேயர் இலங்கையில் காலடி பதித்த சமயம் இங்கிருந்த கோட்டை, கண்டி மற்றும் யாழ்ப்பாண அரசுகளது ஆட்சியாளாக் ளும், மக்களும் தமது அரசுகளையும், பண்பாட்டு மரபுகளையும் பாதுகாக்கும் வகையில் அவர்களுக்கு எதிராகவே செயற்பட்டு வந்தமை வரலாற்று உண்மையாகும். எனினும் போா்த்துக்கேயரது சலுகைகளுக்கும், உதவிகளுக்கும் அடிபணிந்த ஒரு சில சுயநலவாதிகளான ஆட்சியாளரதும் மக்களதும் நடவடிக்கைகளால் இவர்களது எதிா் நடவடிக்கைகள் வலுவிழந்து போயின. இவ்வாறான நிலை யாழ்ப்பாண அரசிலும் காணப்பட்டது. யாழ்ப்பாண இராச்சியத்தைப் பொறுத்தவரை போா்த்துக்கேயரது தொடா்பு ஏற்பட்ட காலப்பகுதியில் அதன் ஆட்சியாளனாக இருநத் சங்கிலி மன்னன் முதல் இறுதி ஆட்சியாளனான சங்கிலிகுமாரன் வரை தமது அரசையும், பண்பாடுகளையும் பாதுகாக்கும் வகையில் மக்களது ஆதரவுடன் அவர்களுக்கு எதிராகவே செயற்பட்டு வந்தனர். எனினும் சில ஆட்சியாளரும் மக்களும் போர்த்துக்கேயரது விசுவாசிகளாக செயற்பட்டதனால் அவர்களது எதிா்ப்பு நடவடிக்கைகள் பயனற்றவையாய் முடிவடைந்தன. எனினும் யாழ்ப்பாண இராச்சியத்தவர்கள் தமது தனித்துவப் பண்பாட்டை பாதுகாக்க போா்த்துக்கேயர் காலத்தில் மேற்கொண்ட நடவடிக்கைகளின் விளைவு இன்றும் யாழ்ப்பாணப் பண்பாட்டை நீடித்து நிலைக்கவும் தனித்துவமானது என அனைவராலும் பாா்க்கப்படவும் காரணமானது எனலாம்.