SEUIR Repository

இலங்கையில் உத்தேச அரசியலமைப்பில் பொதுமக்கள் கருத்தறியும் குழுவின் பரிந்துரைகளும் அதன் நடைமுறைச்சவால்களும்

Show simple item record

dc.contributor.author Sakki, M.B. Safna
dc.contributor.author Sinfa, A. Fathima
dc.contributor.author Imran, M.Y.M. Yoosuff
dc.date.accessioned 2017-01-25T08:48:22Z
dc.date.available 2017-01-25T08:48:22Z
dc.date.issued 2017-01-17
dc.identifier.citation 5th South Eastern University Arts Research Session 2016 on "Research and Development for a Global Knowledge Society". 17 January 2017. South Eastern University of Sri Lanka, Oluvil, Sri Lanka, pp. 1-6. en_US
dc.identifier.isbn 978-955-627-100-3
dc.identifier.uri http://ir.lib.seu.ac.lk/handle/123456789/2127
dc.description.abstract அரசொன்றின் அரசாங்கத்தின் அமைப்பு, அதிகாரம், தொழிற்பாடு ஆகியவற்றையும் அவ்வரசின் எல்லைக்குட்பட்ட மக்களின் உரிமைகளையும் கடமைகளையும் அம்மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான உறவுகளையும் தெளிவாக விளக்கும் விதிகளின் தொகுப்பு அரசியல் யாப்பாகும். இத்தகு அரசியல் யாப்பானது அரசாங்கத்திற்கான வழிகாட்டியாக அமைவதோடு நவீன அரசுகள் தமது அதிகாரத்தை வரையறுத்து ஆட்சி செய்வதற்கும் துணைபுரிகின்றது. இலங்கையிலும் பிரித்தானியரின் காலனித்துவ ஆட்சிக்காலத்திலிருந்து பல்வேறு அரசியலமைப்புக்கள் கொண்டு வரப்பட்டு அதனூடாக ஆட்சி முறைகள் அமுல்படுத்தப்பட்டு வந்துள்ளன. அந்தவகையில் தற்போது நடைமுறையிலிருக்கும் 2ம் குடியரசு யாப்பானது இன ரீதியான பாரபட்சங்களை உள்ளடக்கிய பல்வேறு குறைபாடுகளையும் தன்னகத்தே உள்ளடக்கியிருப்பதாக விமர்சிக்கப்பட்டு வருகின்றது. அதன்படி இக்குறைபாடுகளை நிவர்த்தி செய்து இலங்கை வாழ் மக்களது அபிலாசைகளை பிரதிபலிக்கும் வகையிலான புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்காக 2015 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கம் கருத்தறி குழுவினை தாபித்திருந்தது. இதனூடாக பொது மக்களின் கருத்துக்களும் ஒன்று திரட்டப்பட்டுள்ளன. இவ்வாறு ஒன்று திரட்டப்பட்டுள்ள யோசனைகளும் பரிந்துரைகளும் பல்லின மக்கள் வாழும் இலங்கையில் நடைமுறைக்கு எவ்வாறு சாத்தியமானதாக அமையும் என்பதனை ஆய்வுப்பிரச்சனையாகக் கொண்டும் இக்குழுவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பரிந்துரைகளானது இலங்கையின் இனப் பிரச்சனைக்கு தீா்வாக அமையுமா என்பதை கண்டறிதல். இது தொடர்பிலான சர்வதேச சமூகத்தின் பாா்வையினை திருப்திப்படுத்துமா என்பதை கண்டறிதல். புதிய அரசியலமைப்பு குறித்த புதிய அரசாங்கத்தின் பங்களிப்பினை அறிந்து கொள்ளுதல் என்பவற்றை நோக்காக் கொண்டு இவ்வாய்வானது மேற்கொள்ளப்பட்டுளள்து. இவ்வாய்வானது பண்பு ரீதியான விபரணப் பகுப்பாய்வாகக் காணப்படுவதுடன் இவ்வாய்வுக்கான தரவுகள் முதலாம் மற்றும் இரண்டாம் நிலைத்தரவுகளிலிருந்து பெறப்பட்டுள்ளன. முதலாம் நிலைத்தரவுகளானது நேர்காணல், கலந்துரையாடல் என்பவற்றின் மூலமாகவும் இரண்டாம் நிலைத்தரவுகளானது மக்கள் கருத்தறி குழுவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கை, பத்திரிகை மற்றும் இணையத்தளக் குறிப்புக்கள் என்பவற்றின் மூலமாகவும் பெறப்பட்டுள்ளன. மேற்படி சேகரிக்கப்பட்ட முதலாம் மற்றும் இரண்டாம் நிலை தரவுகளை பகுப்பாய்வு செய்ததன் மூலமாக புதிய அரசியலமைப்பு உருவாக்க யோசனைகளின் சாதக, பாதக அம்சங்களை இனங்கண்டு அவற்றின் நடைமுறைச் சவால்களை வெளிக்கொணாந்து அதன்மூலம் இலங்கையில் வாழும் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களிடையே இன ரீதியான அடக்கு முறைகளை அகற்றி அவர்களுக்கிடையே இணக்கப்பாட்டை ஏற்படுத்துவதற்கான முயற்சியாகவே இதனை கருத முடியும். அத்துடன் இலங்கை வரலாற்றில் ஓரளவு மக்களது கருத்துக்களை செவிமடுத்து தயாரிக்கப்பட்ட முதலாவது அரசியல் திட்டம் என்ற அடிப்படையில் இது முக்கியத்துவம் பெறுவதனையும் இவ்வாய்வினூடாக கண்டு கொள்ளலாம். en_US
dc.language.iso other en_US
dc.publisher Faculty of Arts & Culture, South Eastern University of Sri Lanka en_US
dc.subject Constitution en_US
dc.subject Good governance en_US
dc.subject Government en_US
dc.subject Public opinion en_US
dc.title இலங்கையில் உத்தேச அரசியலமைப்பில் பொதுமக்கள் கருத்தறியும் குழுவின் பரிந்துரைகளும் அதன் நடைமுறைச்சவால்களும் en_US
dc.title.alternative Recommendations and its practical Issues of Public Recommendation Committee in New Constitutional Draft of Sri Lanka en_US
dc.type Article en_US


Files in this item

This item appears in the following Collection(s)

  • SEUARS 2016 [90]
    South Eastern University Arts Research Session - 2016

Show simple item record

Search SEUIR


Advanced Search

Browse

My Account