Abstract:
இன்றைய புதிய அரசியல் ஒழுங்கில் செல்வாக்கு பெற்ற எண்ணக்கருவாக நல்லாட்சி தத்துவம் காணப்படுகின்றது. நல்லாட்சி என்பது மக்கள் நலன் பேணும் நல்ல அரசினை குறிக்கின்றது. மேற்கத்தேய நாடுகளில் நல்லாட்சியினை கட்டியெழுப்பக் கூடிய சாத்தியப்பாடு காணப்பட்ட போதிலும் மூன்றாம் மண்டல நாடுகளில் நல்லாட்சியினை நிறுவுவதில் சிக்கல்கள் பல காணப்படுகின்றன. நல்லாட்சியின் ஊடாக ஜனநாயக பொறிமுறையினை சிறப்பான முறையில் நடைமுறைப்படுத்த முடியும். இந்தவகையில் நல்லாட்சியினை கட்டியெழுப்புவது அரசின் முக்கிய பணியாக இன்று அடையாளப்படுத்தப்படுகின்றது. மூன்றாம் மண்டல நாடுகளில் நல்லாட்சியினை நிறுவுவதற்கு பல முயற்சிகள் மேற்கொள்ள ப்படுகின்றன. இலங்கையின் புதிய தேசிய அரசாங்கமானது நல்லாட்சியினை ஆட்சி தத்துவமாக கொண்டு ஆட்சி அமைக்க விளைகின்றது. இதனால் இன்று இலங்கை அரசியலில் பிரதான பேசுபொருளாக நல்லாட்சி மாறியுள்ளமையை காணலாம். இலங்கை பன்மைத்துவ சமூக கட்டமைப்பினுள் முதிரச்சியடையாத அரசியல் கலாசாரத்தை கொண்ட நாடு என்றவகையில் நல்லாட்சியினை நிறுவுவதில் சிக்கல் தன்மை காணப்படுகின்றது. இந்தடிப்படையில் இலங்கையின் நல்லாட்சியினை நிறுவுவதில் உள்ள சிக்கல்களை ஆய்வு செய்கின்ற பண்புசார் முறையிலமைந்த பகுப்பாய்வாக இவ்வாய்வு கட்டுரை இடம்பெற்றுள்ளது.