dc.description.abstract |
ஒரு நாட்டினுடைய ஜனநாயனத்தை அளவிடும் கருவிகளில் ஒன்றாக வெளிப்படைத்தன்மை காணப்படுவதுடன், நல்லாட்சியின் பண்புகளில் ஒன்றாகவும் வெளிப்படைத்தன்மை காணப்படுகின்றது. வெளிப்படைத்தன்மை என்பதனை தீர்மானம் எடுத்தல் மற்றும் அதனை நடைமுறைப்படுத்தலில் ஒழிவு மறைவின்றி மக்களின் கவனத்திற்கு கொண்டு வருதல் எனப்பொருள் கொள்ளப்படுகின்றது. இவ்வாறு ஒழிவு மறைவற்ற தன்மையினைப் பின்பற்றுவதன் மூலம் ஊழல், மோசடி என்பவற்றைத் தவிர்ப்பதுடன், பொறுப்புக் கூறக் கூடிய தன்மையும் ஏற்படுத்த முடியும். எனவே இவ்வாய்வானது அம்பாறை மாவட்டத்தில் காணப்படுகின்ற 20 பிரதேச செயலகங்களுள் ஒன்றான கல்முனை முஸ்லிம் பிரதேச செயலகத்தினை மையப்படுத்தி செய்யப்பட்டுள்ளது. கல்முனை முஸ்லிம் பிரதேச செயலகமானது கல்முனை, மருதமுனை, நட்பிட்டிமுனை, கல்முனைக் குடி ஆகிய பிரதேசங்களை உள்ளடக்கியதாகும். ஒரு அரசின் நிருவாக விடயங்களை நடைமுறைப்படுத்தும் நிறுவனங்களில் முக்கிய பங்கு பிரதேச செயலகங்களிடமே காணப்படுகின்றது. இருப்பினும் இந்நிறுவனங்களின் செயற்பாடுகள் மற்றும் நடவடிக்கைகள் தொடர்பான வெளிப்படைத்மை குறைவாகவே காணப்படுவதை ஆய்வுப் பிரச்சினையாகக் கொண்டு இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே இவ்வாய்வானது கல்முனை முஸ்லிம் பிரதேச செயலகத்தில் வெளிப்படை தன்மை குறைவாக இருப்பதைக் கண்டறிதல் மற்றும் வெளிப்படைத்தன்மையுடைய பிரதேச செயலகமாக மாற்றமுறச் செய்தல் ஆகிய காரணிகளை கண்டறிதலே இவ்வாய்வின் நோக்கமாகக் காணப்படுகிறது. இவ்வாய்வானது பண்பு ரீதியான அம்சத்தினை கொண்டிருப்பதால் இவ்வாய்விற்கான தரவுகளானது 1ஆம் மற்றும் 2ஆம் தரவு நிலை மூலாதாரங்களில் இருந்து பெறப்பட்டுள்ளது. 1ஆம் நிலைத் தரவு மூலகங்களாக அவதானம் நேர்ககாணல் என்பற்றின் மூலமும் 2ஆம் நிலை தரவு மூலாதாரங்களாக புத்தகங்கள், அறிக்கைகள், சஞ்சிகைகள் மற்றும் இணையத்தளங்கள் மூலமாகவும் பெறப்பட்டுள்ளன. பெறப்பட்ட தகவல்களை விவரனரீதியாக பகுப்பாய்வு செய்வதன் மூலமாக கல்முனை முஸ்லிம் பிரதேச செயலகத்தின் வெளிப்படைத் தன்மை குறைவாக இருப்பதற்கான காரணிகளாக ஊழியர்களின் அலட்சியப் போக்கு, மக்களின் தீவிர அக்கறைக் காட்டாமை, ஊழல் செயற்பாடுகள், காலதாமதம், அரசியல் செல்வாக்கு, போதிய அளவு வசதி வாய்ப்பின்மை, அளவுக்கு அதிகமான ஆளனி காணப்படுதல் என்பன அடையாளம் காணப்பட்டுள்ளன. |
en_US |