Abstract:
ஒவ்வொரு நாட்டிற்கும் அரசியல் திட்டம் என்பது முக்கியமாக காணப்படுகின்றது. ஏனெனில் அதுவே முழுமையாக ஒரு அரசினை செயற்படுத்தும் கருவியாக இருப்பதோடு இவ் அரசியலமைப்பானது ஒவ்வொரு அரசிற்கும் ஏற்றவகையில் நெகிழும், நெகிழா அரசியலமைப்பாகவும் ஒற்றையாட்சி, சமஷ்டியாட்சி அரசியலமைப்பாகவும் மற்றும் எழுதப்பட்ட எழுதப்படாத அரசியலமைப்பாகவும் அமைந்துள்ளது. இதன்படி இலங்கையானது எழுதப்பட்ட நெகிழா ஒற்றையாட்சி அரசியலமைப்பினைக் கொண்டுள்ளது. பிரித்தானியா இலங்கையில் காலணியாதிக்கத்தினை நிலை நாட்டிய காலம் முதல் இலங்கையில் முறையே 1833, 1910, 1921, 1924, 1931, 1947 ஆண்டுகளில் பல்வேறு அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் முன்வைக்கப்பட்டன. ஆனால் 1948 ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரம் பெற்றதன் பின்னர் 1978ஆம் ஆண்டு இரண்டாம் குடியரசு அரசியலமைப்பும் அதன் பின்னர் 1978 ஆம் ஆண்டு இரண்டாம் குடியரசு அரசியலமைப்பும் இலங்கை மக்களால் தமக்கென உருவாக்கிக் கொள்ளப்பட்டது. இவ்வாறு 1978 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இலங்கையின் அரசியலமைப்பு இன்றுவரையிலும் இலங்கையில் நடைமுறையில் இருந்தாலும் இது பல்வேறு குறைபாடுகளையும் நெருக்கடிகளையும் கொண்ட அரசியலமைப்பாகவே காணப்படுகின்றது. இந் நெருக்கடிகள் மற்றும் புதிய அரசியலமைப்பின் முக்கியத்துவம் என்பவற்றை உளள்டக்கிய ஒரு விமர்சனப் பகுப்பாய்வாகவே இக்கட்டுரை இடம்பெற்றுள்ளது.