dc.description.abstract |
இயற்கை எழில்மிகு உலக நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கும் முக்கியமானதோர்
இடமுண்டு. காரணம் இலங்கையின் அமைவிடம், தரைதோற்ற அமைப்பு, காலநிலை
என்பவற்றை கூறலாம். எனினும் இவ்வமைவிடம் காரணமாகவே இலங்கையில் சீரற்ற
காலநிலை நிலவும் காலங்களில் நாட்டின் அனைத்து பகுதிகளும் பாரியளவான
பாதிப்புக்களுக்கு உட்படுவதோடு, தனது கோர முகத்தை காட்டி மனித உயிர்களுக்கும்
ஊறு விளைவிக்கின்றது. தொடர்ச்சியாக நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பெய்யும்
மழையினால், இலங்கையின் மத்திய மலைநாட்டின் பல இடங்கள் சரிவுக்குட்படுகின்றன.
அந்தவகையில் பதுளை மாவட்டத்தின் அநேகமான இடங்கள் சரிவுக்குட்பட்டு மனித
உயிர்களையும், உடைமைகளையும் காவு கொண்டு வருகின்றமையை காணலாம்.
உதாரணமாக மீரியபெத்த சரிவினை கூறலாம். இயற்கை காரணிகள் மண்சரிவு
அபாயத்தை ஏற்படுத்தினாலும், மனித செயற்பாடுகளும் அதில் தாக்கம் செலுத்தாமல்
இல்லை.எனவே அதிகம் மண்சரிவு இடம்பெறும் இடங்களையும் அவை
இடம்பெறுவதற்கான பௌதிக மற்றும் மானிட காரணிகளையும் அவற்றால் ஏற்படும்
பாதிப்பையும் அடையாளம் காணுவதே ஆய்வின் நோக்கமாகும். இதற்கு முதலாம்
நிலைத்தரவுகளாக வினாக்கொத்துஇ நேரடி கலந்துரையாடல் என்பனவும், இரண்டாம்
நிலைத்தரவுகளாக அனர்த்த முகாமைத்துவ அறிக்கைகள், இணையத்தளம் மூலம்
பெறப்பட்ட தரவுகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இத்தரவுகள் பண்புசார் மற்றும் அளவுசார்
பகுப்பாய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாய்வில் அடையாளம் காணப்பட்ட சமூக
பிரச்சினைகளாக மக்களிடையே அச்சவுணர்வு மேலோங்கள், உயிரிழப்பு, வீடுகள்
மண்ணில் புதைந்து போதல், மன அழுத்தங்கள், வாசஸ்தலங்கள் அழிவுறுதல், குடிநீர்
பாதிப்பு, நோய் அபாயம் போன்றனவும் பொருளாதார தாக்கங்களாக சொத்து சேதம்,
உடைமைகள் சேதம், விவசாய நிலம் அழிவடைதல், பண்ணைகள் அழிவுறுதல்
பாதிப்பு என்பனவும் இனங்கானப்பட்டன. எனவே இது தொடர்பாக போதிய கவனம்
என்பனவும், சூழலியல் தாக்கங்களாக மண்தரமிழத்தல், ஊற்று தடைப்படல்,
நீர்தரமிழத்தல், தரைமேற்பரப்பு கட்டமைப்பு மாற்றமுறல், தாவரபோர்வை அழிப்பு, விலங்கு
செலுத்தல் நடைமுறைக்கு அவசியமான தேவையாக காணப்படுகின்றது. |
en_US |