Abstract:
காலநிலை என்பது குறிப்பிட்ட பிரதேசமொன்றின் வானிலை நிலைமைகளின் தொகுப்பாக
காணப்படுகின்றது. அத்துடன் வளிமண்டலவியல் மூலகங்களின் நீண்ட கால
புள்ளிவிபரங்களின் பண்புகளைக் கொண்டனவாகக் காணப்படுகின்றன. எனவே காலநிலை
என்பது ஒரு வருடத்தின் குறிப்பிட்ட பருவத்தில், பரந்த பகுதிக்கான பொதுவான
நிலைமைகளைக் குறித்துக் காட்டுவதாக உள்ளது. முதலாம் நிலை தரவுகளாக நேரடி
அவதானிப்பு முறை, நேர்காணல் முறை, வினாக்கொத்து முறை, புகைப்படங்கள்
என்பனவும் இரண்டாம் நிலைத் தரவுகளாக கிராம சேவகர் அலுவளக அறிக்கைகள்,
வளிமண்டல திணைக்கள அறிக்கைகள், அனர்த்த முகாமைத்துவ திணைக்கள
அறிக்கைகள் என்பனவும் காணப்படுகின்றது. ஆய்வுக்கு எடுக்கப்பட்ட காலத்தில்
மொத்தமாக 4 வரட்சிப் பருவமும் 2 ஈரப் பருவமும் நிலவியுள்ளது. முதலாவது வரட்சிப்
பருவம் 6 வருடத்திற்கும் அதனைத் தொடர்ந்து இரண்டாவது வரட்சிப் பருவம் 5
வருடத்திற்கும் அடுத்து 12 வருட ஈரப் பருவமும் மீண்டும் 11 வருட ஈரப் பருவமும் பின்
தொடர்ச்சியாக 1995 இலிருந்து 2008 வரை வரட்சி நிலையும் காணப்பட்டுள்ளது. எனவே
இப்பிரதேசத்தின் நிலைத்து நிற்கும் அபிவிருத்தியையும் சமூக அபிவிருத்தியையும்
நோக்கமாகக் கொண்டு காலநிலையின் பருவகால மாறுபாட்டை துரிதப்படுத்தும்
நடவடிக்கைகளைக் குறைத்து அப்பருவகால மாறுபாட்டினால் ஏற்படும் காலநிலைத்
தன்மைகளுக்கு இசைவாக்கமடையும் செயற்பாடுகள் இப்பிரதேசத்தில் அரச மற்றும் அரச
சார்பற்ற நிறுவனங்களினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.