dc.contributor.author |
Banu, M.N.N. |
|
dc.date.accessioned |
2017-01-29T05:01:39Z |
|
dc.date.available |
2017-01-29T05:01:39Z |
|
dc.date.issued |
2017-01-17 |
|
dc.identifier.citation |
5th South Eastern University Arts Research Session 2016 on "Research and Development for a Global Knowledge Society". 17 January 2017. South Eastern University of Sri Lanka, Oluvil, Sri Lanka, pp. 541-547. |
en_US |
dc.identifier.isbn |
978-955-627-100-3 |
|
dc.identifier.uri |
http://ir.lib.seu.ac.lk/handle/123456789/2158 |
|
dc.description.abstract |
இலங்கைக்கு வருமானத்தை ஈட்டித்தருவதில் மலையகம் முக்கிய பங்களிப்பை
வகிக்கின்றது. இலங்கையின் ஏனைய பிரதேசங்களை விட மலையகம் வறுமைக்கு உட்பட்ட
பிரதேசமாக மக்கள் கண்ணோட்டத்தில் நோக்கப்படுகிறது. பல தசாப்தங்களாக இன்றும்
உலகளாவியரீதியில் பேசப்பட்டு வருகின்ற பிரச்சினைகளில் ஒன்றுதான் வறுமையாகும்.
வறுமை என்பது மகிழ்ச்சியில் குறைவை ஏற்படுத்தக்கூடியதும், சுயகௌரவத்துடன்
வாழ்வதற்கு தேவையான அடிப்படைத் தேவைகளைக் கூட பூர்த்தி செய்ய முடியாத
அளவிற்கு மிகக்குறைந்த வருமானத்தை கொண்டு காணப்படுதலாகும். (Ahamed Lebbe
& Fazeela, 2013). இவ்வாறு வறுமைக்குட்பட்டு காணப்படும் இப்பகுதி மக்கள் கல்வி
ரீதியாகவும் பின்தங்கி காணப்படுகின்றனர். இவ்வாறான சிக்கல்களுக்கு மத்தியில் அங்கிருந்து
பட்டக் கல்வியை தொடர பல்கலைகழகம் நோக்கி வரும் மாணவர்கள் பல்வேறு
பிரச்சனைகளுக்கு முகங்கொடுக்கின்றனர். இதனால் பல்கலைகழகத்தில் அவர்கள்
எவ்வாறான சவால்களை எதிர்நோக்குகின்றனர் என்பதை கண்டறிவதே இவ்வாய்வின்
நோக்கமாகும். இதனை ஆராயும் நோக்கில் இலங்கையின் அம்பாறை மாவட்டத்தில் ஒலுவில்
பிரதேசத்தில் அமைந்துள்ள தென்கிழக்கு பல்கலைகழகத்தில் கல்வியை மேற்கொள்ளும்
மலையக மாணவர்களை மையப்படுத்தியதாக இவ்வாய்வு அமைந்துள்ளது. இவ்வாய்விற்கு
முதலாம் நிலை தரவுகளை சேகரிப்பதற்காக நோக்க மாதிரி அடிப்படையில் 40 மலையக
பட்டதாரி மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு வினாக்கொத்துகள் வழங்கப்பட்டதுடன்
நேர்காணல், அவதானிப்பு என்பவற்றுடன் மலையக பிரதேச செயலக உறுப்பினர் ஒருவர்
மற்றும் மலையக ஆசிரியர் 2 பேரிடம் தொலைபேசி கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டன.
பத்திரிகை ஆக்கங்கள், புத்தகங்கள், பரீட்சைகள் திணைக்களம், இலங்கை தென்கிழக்கு
பல்கலைகழகம் மற்றும் ஆண்டறிக்கைகளில் இரண்டாம் நிலைத் தரவுகள் பெறப்பட்டன.
விவரண முறை மூலம் பகுப்பாய்வு செய்யப்பட்டு முடிவுகள் அட்டவணை, வட்ட வரைபு
மற்றும் சலாகை வரைபு முறையான வரைபுகளில் காட்டப்பட்டுள்ளது. அதன்படி குடும்ப
வருமானம் போதாமையினால 88 சதவிதமானவர்களும், 90சதவீதமானவர்கள் காலநிலை
பிரச்சினையினால், 48 சதவீதமானவர்கள் உள ரீதியாக பிரச்சி;னைகள் என்பது போன்ற
பல்வேறுபட்ட சவால்கள் கண்டறியப்பட்டதுடன் மலையக மக்களின் வாழ்க்கைத்தரத்தை
உயர்த்த அரசாங்கத்திற்கும், மலையக மாணவர்களின் சவால்களை வெற்றி
கொள்ளவதற்கான பல்வேறு விடயங்கள் பல்கலைகழகங்களிற்கும் பரிந்துரைகள்
இவ்வாய்வில் முன் மொழியப்பட்டுள்ளன. |
en_US |
dc.language.iso |
other |
en_US |
dc.publisher |
Faculty of Arts & Culture, South Eastern University of Sri Lanka |
en_US |
dc.subject |
மலையகம் |
en_US |
dc.subject |
சவால்கள் |
en_US |
dc.subject |
வறுமை |
en_US |
dc.subject |
வாழ்க்கைத்தரம் |
en_US |
dc.title |
இந்திய வம்சாவழி மலையக மாணவர்கள் பல்கலைக்கழகத்தில் எதிர் நோக்கும் சவால்கள்: இலங்கை தென் கிழக்கு மாணவர்களை மையப்படுத்திய ஆய்வு |
en_US |
dc.type |
Article |
en_US |