Abstract:
இஸ்லாமோபியா எனப்படும் இஸ்லாமிய எதிர்ப்பு எனும் கருத்தியலானது மேற்கத்தேய
நாடுகளில் பரவி வருகின்ற அல்லது இஸ்லாமிய அச்சத்த்pன் விளைவாக
கட்டமைக்கப்பட்ட கருத்தியலாகக் காணப்படுகிறது. இஸ்லாமிய உலகிலும் மேற்கத்தேய
நாடுகளிலும் ஏற்பட்டிருக்கும் நவீன இஸ்லாமிய எழுச்சியின் வேகமான அலைகள் உலக
மக்களை அதனை நோக்கி திரும்பி பார்க்க வைத்துள்ளன. குறிப்பாக மேற்குலகில் மிக
வேகமாக இஸ்லாம் பரவி வருவதன் விளைவாக கிறிஸ்தவ பாதிரிமார்களும், மேற்குலகின்
சில அறிஞர்களும் இஸ்லாம் குறித்துப் போலியான தகவல்களை முன்வைப்பதோடு
முஸ்லிம்களை கொடூரமானவர்களாகவும், பயங்கரவாதிகளாகவும் காட்ட முனைந்து
வருவதைக் காணக்கூடியதாக உள்ளது. இவ்வாறான செயற்பாடுகளினால் இஸ்லாமோபியா
எனப்படும் இஸ்லாமிய எதிர்ப்பு எனும் கருத்தியலானது மேற்குலகினால் கட்டமைக்கப்பட்டு
வருகின்றது. இன்று இக்கருத்தியலானது மேற்குலகில் மட்டுமன்றி இலங்கையிலும் இதன்
தாக்கம் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றது. அதாவது இலங்கையில் மூன்று தசாப்த கால
போருக்குப் பின்னர் இன, மத வாத சிங்கள பௌத்த கடும் போக்கு சக்திகள் இலங்கை
முஸ்லிம் சமூகத்தை உளவியல் ரீதியில் பலவீனப்படுத்தி தாம் அடையத் துடிக்கும்
இலக்குகளை எட்டிவிட இஸ்லாமிய எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றமை
இலங்கையிலும் இஸ்லாமிய எதிர்ப்பு தீவிரமாக பரவி வருகின்றமையை பிரதிபலிப்பதாக
சுட்டிக்காட்டப்படுகின்றது. எனவே இதனை மையப்படுத்தியதாக ஆய்வுப்பிரச்சினை
காணப்படுகின்றது. இதற்கமைய இவ்வாய்வானது இலங்கையில் போருக்குப் பின்னரான
இஸ்லாமோபியா சிந்தனையும் அதன் தாக்கத்தினையும் கண்டறிவதனை நோக்கமாகக்
கொண்டுள்ளது. இதனை மேற்கொண்டு செயற்படுவதற்கு இச்சிந்தனையின் தாக்கத்தினை
அடையாளம் காணுவதினையும் இவ்வாய்வுக்கு இரண்டாம் நிலைத் தரவுகள்
பயன்படுத்தப்பட்டுள்ளதோடு பண்பு சார் பகுப்பாய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன்
விவரணப் பகுப்பாய்வாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. விவரணப் பகுப்பாய்வின் மூலமாக
சிங்கள பௌத்த கடும் போக்கு சக்திகளினால் இலங்கையில் இஸ்லாமோபியா அச்சத்தின்
வெளிப்பாடு மற்றும் அதன் மூலமாக ஏற்பட்ட தாக்கங்களாக கடும் பௌத்த தேசிய
இயக்கங்களின் தோற்றம், இன நல்லிணக்கம் பாதிப்படைந்தமை, ஆட்சி மாற்றம்
ஏற்பட்டமை, முஸ்லிம்களின் மதஸ்தலங்கள் தாக்கப்படுகின்றமை, முஸ்லிம்களின்
கலாசாரம் மற்றும் பாதிப்படைந்தமை மற்றும் சர்வதேச பயங்கரவாத குழுக்களுடன்
தொடர்புபடுத்துகின்றமை என்பன இனங்காணப்பட்டுள்ளன.