dc.description.abstract |
முத்தமிழில் ஒன்றாக போற்றப்படும் தமிழ்நாடகத்துறையானது, வேறெந்த கலைத்துறையும்
புலப்படுத்த முடியாத சிந்தனைகளை சிறப்பாக வெளிக்காட்டும் ஒரு கலை வடிவமாகும்.
இதன் வளர்ச்சியின் ஒரு பாகமாக மலையக நாடகங்கள் விளங்குகின்றன.
தென்னிந்தியாவில் இருந்து தோட்டதொழில்களுக்காக அங்குள்ள மக்கள் இங்கு
அழைத்து வரப்பட்டபோது அவர்களுடனே வந்தவைகளுள் இக்கலைவடிவமும் ஒன்றாகும்.
ஆரம்பத்தில் பாரம்பரிய கூத்துக்களையும் இதிகாச, புராண காவியங்களையும் மாத்திரம்
வெளிப்படுத்திய இம்மலையக நாடகங்கள் பிற்பட்ட காலங்களில் அறிவியல் சிந்தனை
வளர்ச்சியின் நிமித்தம் பல்வேறு பரிணாமங்களை கண்டு, 1980 காலப்பகுதிகள் பாரிய
வளர்ச்சி கண்டது. அக்காலப்பகுதிகளில் பாரம்பரிய நாடகங்கள் மாத்திரமின்றி, பல
சமூகச்சீர்திருத்த நாடகங்களும் காணப்பட்டன. இது தவிர வீதி மற்றும் மேடை
நாடகங்களும் அரங்கேறின. பண்பாட்டு கலாச்சார அம்சங்களை பிரதிபலிக்கும்
நாடகங்களாக மாத்திரம் காணப்பட்ட இவை, பிற்பட்ட காலங்களில் சமூக நோக்குடன்
அரங்கேறின. இருப்பினும் இருபத்தியோராம் நூற்றாண்டான இக்காலப்பகுதியில்
தொழிநுட்பத்தினதும் அறிவியலினதும் வளர்ச்சியினால் இந்நிலைமை மாற்றமடைந்துள்ளது.
பாரம்பரிய நாடகங்கள் முற்றாக அழிந்து விடும் நிலையை எட்டியுள்ள அதேவேளை
ஏனைய நாடகங்களும் அருகிக் கொண்டே வருவதனை சுட்டிக்காட்டுவதோடு,
காப்பாற்றப்பட வேண்டிய கட்டாயத்தி;ல் காணப்படும் இம்மலையக நாடகங்களை
பேணிப்பாதுகாப்பது எவ்வாறு என்பதை நோக்கமாகக் கொண்டே இவ்வாய்வு
மேற்கொள்ளப்படுகிறது. இவ்வாய்விற்கு முதலாம் நிலைத்தரவுகளும் இரண்டாம்
நிலைத்தரவுகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன. முதலாம் நிலைத்தரவுகளாக கலந்துரையால்,
களஆய்வு, போன்றனவும் இரண்டாம் நிலைத்தரவுகளாக இது தொடர்பாக எழுதப்பட்ட
நூல்கள், ஆய்வுக்கட்டுரைகள், சஞ்சிகைகள், இணையப்பக்ககங்கள் என்பனவும்
பயன்படுத்தப்பட்டுள்ளன. அத்தோடு மலையக நாடகங்கள் அழிந்துவிடாமல் பாதுகாப்பது
அனைவரதும் கடமை என்பதை முடிவாகக் கொண்டே இவ்வாய்வு அமைகிறது. |
en_US |