dc.description.abstract |
கிராம மக்களின் மரபு வாழ்விலிருந்து பிறக்கும் வாய்மொழி இலக்கியங்களையே நாட்டார்
இலக்கியம் என்கின்றோம். இவ்விலக்கியம், சமூகத்தின் அறிவியலையும், வாழ்வியலையும்
படம் பிடித்துக் காட்டும் அளவுகோலாகும். நாட்டார் இலக்கியங்களை பல்வேறு வகையாக
பிரித்து நோக்கலாம். அவற்றில் மிகக் குறுகிய வடிவைக் கொண்ட நாட்டார் இலக்கியமே
பழமொழியாகும். பழமொழிகள் ஆழமான கருத்துக்களைச் சுருக்கமாகக் கூறுகின்றன.
பழமொழிகள் கிராமத்து மக்களின் அறிவியலை வெளிப்படுத்தும் முத்திரையாகும். கிராம
மக்கள் தமது அன்றாட பேச்சில் நிறையப் பழமொழிகளைக் கலந்து பேசுகின்றனர்.
மனிதர்களிடம் காணப்படும் நற்பண்புகள், தீயபண்புகள் பற்றி பல இலக்கியங்கள்
எடுத்தியம்புகின்றன. குறிப்பாக, திருக்குறள், நாலடியார் முதலிய நூல்கள் இவை பற்றி
ஆழமாகப் பேசுகின்றன. இலங்கையில் தமிழ் - சிங்கள மொழி பேசும் மக்கள் வாழ்விலும்
நாட்டார் பழமொழிகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன. பழமொழிகளில் மனிதர்களிடம்
காணப்படும் பல்வேறுபட்ட நல்ல, தீய பண்புகள் பற்றி அறிமுகமான கருப்பொருள்களை
வைத்து கூறப்பட்டிருப்பது நயக்கத்தக்கதாகும். இரு வேறுபட்ட சமூகத்திலிருந்து பிறக்கும்
பழமொழிகளில் அச்சமூகம் சார்ந்த சொற்பிரயோகங்கள் அல்லது அச்சமூகம் பின்பற்றும்
மதம் சார்ந்த சொற்பிரயோகங்கள் அதிகம் கையாளப்பட்டிருப்பதைக் காணலாம். மேலும்
கிராம மக்களின் வாழ்வியலோடு கலந்துள்ள இப்பழமொழிகள், அவர்களின் பேச்சு
மொழியிலேயே இருப்பது குறிப்பிடத்தக்க சிறப்பம்சமாகும். இப்பழமொழிகள் சங்க காலம்
முதலே தமிழ் இலக்கியத்தில் இடம்பிடித்துள்ளன. அதனால்தான் தொல்காப்பியமும்
இப்பழமொழிகள் பற்றிப் பேசுகின்றது. சிலர் பழமொழிகளைத் திரட்டும் முயற்சியில்
ஈடுபட்டாலும் அவை பற்றிய ஆய்வுகள் தமிழில் மிகக் குறைவாகவே உள்ளன.
அதேவேளை, தமிழ ; - சிங்களப் பழமொழிகளில் மனிதனின் பணபு; கள் தொடர்பாக
இதுவரை எவ்வித ஆய்வுகளும் இடம்பெறவில்லை. தமிழ் - சிங்கள நாட்டார்
பழமொழிகளில் மனிதனின் நல்ல, தீய பண்புகள் எந்தளவிற்கு சித்தரிக்கப்பட்டுள்ளன
என்பதை ஆராய்வதே இவ்வாய்வின் பிரதான நோக்கமாகும். மேலும், நாட்டார்
இலக்கியத்தில் பழமொழிகள் பெரும் முக்கியத்துவத்தினை எடுத்துக்காட்டல், சிங்கள
நாட்டார் பழமொழிகளை அறிமுகம் செய்தல், நாட்டார் பழமொழிகளில் மொழிப் பயன்பாடு
எவ்வாறு காணப்படுகின்றது என்பதனை ஆராய்தல் முதலிய உப நோக்கங்களையும்
கொண்டு இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. கள ஆய்வின் மூலம் திரட்டப்பட்ட தமிழ்-
சிங்கள நாட்டார் பழமொழிகளையும் நூல்களாக வெளிவந்துள்ள பழமொழித்
தொகுப்புக்களையும் அடிப்படையாகக் கொண்டு இவ்வாய்வு மேற்கொள்ளப்படுகின்றது.
இவ்வாய்வில் விளக்கமுறை, சமூகவியல், ஒப்பீட்டு, மொழியியல் அணுகுமுறைகள்
பயன்படுத்தப்பட்டுள்ளன. மேலும், இவ்வாய்வில் முதலாம் நிலைத் தரவுகளாககள
ஆய்வின் போது திரட்டப்பட்ட தகவல்களும், பழமொழிகளும், நூல்களில் எழுதப்பட்டுள்ள
பழமொழிகளும் இரண்டாம் நிலைத் தரவுகளாக பழமொழிகள் தொடர்பாக எழுதப்பட்டுள்ள
நூல்களும் ஆய்வுக்கட்டுரைகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன. நாட்டார் இலக்கியங்களில்
குறிப்பாக, பழமொழிகளில் மனிதர்களிடம் காணப்படும் பண்புகள் தொடர்பான பல்வேறு
விடயங்கள் பேசப்படுகின்றன. |
en_US |