Abstract:
மனுஷ்யபுத்திரனின் கவிதைகளின் அரசியல் பற்றியதான இவ்வாய்வு மனுஷ்யபுத்திரனின்
கவிதைகள் கட்டமைக்கும் அரசியல் தத்துவ மற்றும் அழகியல் அடிப்படைகள் மூலம்
எடுத்து விளக்கப்பட்டுள்ளது. கவிதை, கருத்துநிலை என்பன பற்றி கோட்பாட்டு ரீதியாக
ஆராயப்பட்டு கவிதைக்கும் கருத்துநிலைக்கும் இடையேயான உறவுநிலை பற்றி விளக்கி
எல்லாக் கலை இலக்கியங்களும் அடிப்படையில் ஏதோ ஒரு கருத்துநிலை சார்ந்து
இயங்கும் என்பது கண்டறியப்பட்டுள்ளது. கவிதையின் அரசியல் என்பது படைப்பாளியின்
கருத்துநிலை வெளிப்பாடேயாகும். குறிப்பாக மனுஷ்யபுத்திரனது கவிதைகளின்
பேசுபொருள், வடிவம், வெளிப்பாட்டு முறை மற்றும் மொழியுடல் என்பன அவரது அனுபவ
உணர்வுகளினதும், கருத்துலகினதும் அழகியல் வெளியாக சிருஸ்டித்துள்ளமை
இனங்கானப்பட்டுள்ளது. மனுஷ்யபத்திரனின் கவிதைகள் பற்றிய ஆய்வின் மூலம்
தமிழ்க்கவிதை வரலாற்றில் ஒரு பகுதியையும் அதே நேரத்தில் தமிழ்ச் சமூக பண்பாட்டின்
ஒரு பகுதித் தேவையையும் நிறைவு செய்கின்றது.