Abstract:
இன்று உலகளாவிய ரீதியில் பெண்கள் தொடர்பான கருத்தாக்கங்கள் அதிகம் நிலவி
வருகின்றன. பெண்கள் குறித்து கவனம் செலுத்தும், அதிகம் பேசுகின்ற துறைகளுள்
இலக்கியத்திற்கு தனியிடம் உண்டு. இவை, பெண்களின் சமூகவியல்சார் பங்குகள்,
பிரச்சினைகள், வகிபாகங்கள், என்பனவற்றுக்கு அதிக முக்கியத்துவம் அளித்துள்ளன்
அளிக்கின்றன. அவற்றுள், 20 நூற்றாண்டு ஈழத்து இலக்கியங்களில், குறிப்பாக
சிறுகதைகள், பெண்கள் தொடர்பான விடயங்களில் கூடுதல் கவனம் எடுத்து வருகின்றன.
பெண்கள் பற்றி பேசுகின்ற சிறுகதை என்ற அடிப்படையில் பித்தனின் கதைகள் இங்கே
கவனிக்கப்படக் கூடியவை. அந்தவகையில் பித்தன் கே.எம்.எம் ஷா என்பவரின்
சிறுகதைகள் உள்ளடங்கிய "பித்தன் கதைகள்‟ எனும் தொகுப்பு நூலில், பெண்கள்
குறித்த பார்வைகள் எவ்வாறானது என்பதைக் கண்டறிவதாக இவ்வாய்வு
அமைந்துள்ளது. இவரது படைப்புக்கள், பெரும்பாலும் பெண்களை மையப்படுத்தியதாகவும்
அல்லது அவர்களை பின்னணியாகக் கொண்டதாகவுமே அமையப் பெற்றுள்ளன. இதற்கு
உதாரணமாக „பாதிக்குழந்தை‟,"அமைதி‟,"பைத்தியக்காரன்‟,"இருட்டறை‟ போன்றவற்றை
குறிப்பிட முடியும். சமூகத் தளத்தில் பெண்கள் குறித்த பார்வை பற்றிய மதிப்பீட்டில்
பித்தன்கே.எம்.எம். ஷா வின் சிறுகதைகள் பங்கெடுக்கும் பாங்கை சம காலத்துக்கு ஏற்ற
அடிப்படையில் ஆராய்தல் எனும் நோக்கிற்கு அமைவாக இவ் ஆய்வு ஆராயப்பட்டுள்ளது.
மேலும் 1950/ 60 களில் எழுதப்பட்ட இச் சிறுகதைகள் சம காலத்து பெண்கள் சார்
நிகழ்வுகளுடன் பொருந்துகின்றனவா எனும் ஆய்வுப்பிரச்சினையின் கீழ், முதலாம்,
இரண்டாம் நிலை தரவுகளை அடிப்படையாகக் கொண்டதோர் சமூகவியல், விவரணவியல்
அணுகுமுறையிலான ஆய்வாகவும் இவ்வாய்வானது அமைந்துள்ளது.