Abstract:
இன்று விஞ்ஞான மெய்யியலிலும், ஒழுக்கவியலிலும் விசாரணை செய்யப்படுகின்ற
முக்கியமான எண்ணக்கருக்களில் "நனோதொழில்நுட்பமும்‟ ஒன்றாகும். உலகமயமாக்கல்
விடயத்தில் இத்தொழில்நுட்பத்தின் வகிபாகம் மிகவும் இன்றியமையாதது. கிரேக்க
மொழியில் "நனோ‟எனும் சொல் "குள்ளம்‟ என்ற பொருளைத் தருகிறது. இதிலிருந்து நனோ
தொழில்நுட்பவியல் என்பதை வியாக்கியானப்படுத்துகின்ற போது மிக நுண்ணிய பொருட்
கூறுகளுடனானதொரு தொழில்நுட்பம் என வியாக்கியானப்படுத்த முடியும். நனோ தொழில்
நுட்பம் பற்றி முதலில் பேசியவராக ரிச்சட் பெயின்மான் (1959) காணப்படுகிறார்.
சாதாரணமாக இன்று குளிர்சாதனப்பெட்டி, சலவை இயந்திரம் போன்றன கூட நனோ
தொழிநுட்பத்தினால் உருவாக்கபடுகிறது. இவ்வாய்வு நனோ தொழில்நுட்பம் என்றால் என்ன?
என்பது பற்றிய சுருக்க விளக்கத்துடன் அதனுடைய ஒழுக்கவியல் ரீதியான
பாதிப்புக்களைஅடையாளம் காண்கின்ற முனைப்பில், முக்கிய ஒழுக்கவியல் பாதிப்பாக
மிகநுண்ணிய தொழில்நுட்பத்தை (நனோ தொழில்நுட்பம்) கொண்டு தயாரிக்கப்படும்
இயந்திரங்களின் அபரிமிதமான பெருக்கத்தால் ஏற்படுகின்ற “தனிப்பட்ட வாழ்க்கையின்
சிதைவு” மையப்படுத்தப்படுகிறது. இவ்வாய்விற்கான முறையிலாக விளக்கமுறையும்,
ஒழுக்கவியல்சார் பகுப்பாய்வு முறையும் பயன்படுத்தப்படுகிறது.