Abstract:
21ம் நூற்றாண்டு அறிவு மைய காலம் என்பதை நிரூபிக்கும் முகமாக பெற்றோர்களும்,
மாணவர்களும் கல்விக்குரிய முக்கியத்துவத்தை அறிந்து செயற்படுவதுடன் இதனை
உணர்ந்த இலங்கை அரசும் இலவச கல்வியுடன் செயற்படுத்தப்பட்ட கட்டாய கல்வி,
பாடசாலைக் கல்வி, விஞ்ஞானக்கல்வி, தொழிநுட்பக்கல்வி என பல கல்வி முறைகளை
அறிமுகப்படுத்தினாலும் ஏனைய சமூக மாணவர்களுடன் ஒப்பிடும் போது மலையக சமூக
மாணவர்கள் கல்விக்குரிய முக்கியத்துவதை கொடுக்காமல் அதனைப் புறக்கணித்து
பாடசாலையை விட்டு அதிகமாக இடைவிலகுகின்ற நிலைக் காணப்படுகின்றது. ஆகவே
ஏன் இவ்வாறு மலையக பாடசாலை மாணவர்கள் அதிகமாக பாடசாலையை விட்டு
இடைவிலகுகின்றனர் என்பதை கண்டறியும் முகமாக “மலையக பாடசாலையும் மாணவர்
இடைவிலகளும்” எனும் தலைப்பில் ப/ கொஸ்லந்தை ஸ்ரீ கணேஷா தமிழ்
மகாவித்தியாலயத்தை மையமாகக் கொண்டு இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டதுடன்
இவ் ஆய்வுக்கு முதலாம் நிலைத் தரவுகளை சேகரிப்பதற்காக நோக்க மாதிரியின்
அடிப்படையில் 30 மாணவர்கள் தெரிவு செய்யப்ட்டு அவர்களுக்கு வினாக் கொத்துகள்
வழங்கப்பட்டு தரவுகள் பெறப்பட்டன. அத்துடன் நேர்காணல், குவியகுழு கலந்துறையாடல்
மூலமும் இரண்டாம் நிலைத் தரவுகளாக மாணவ வரவு அறிக்கைகள், ஆசிரியர் வரவு
அறிக்கைகள், மாணவ மதிப்பீட்டு அறிக்கைகள், நூல்கள் போன்றவைகள் மூலம் பண்பு
ரீதியான, அளவு ரீதியான தரவுகள் பெற்றுக் கொள்ளப்பட்டு பகுப்பாய்வு செய்ததன்
விளைவாக பொருளாதார, சமூக, குடும்ப, சூழல், பாதுகாப்பு போன்ற பல காரணிகள்
மாணவர்கள் இடைவிலகளுக்கு காரணங்களாக அமைந்தாலும் பெற்றோர்களின் அசமந்தப்
போக்கே அதிகமான மாணவர்கள் இடைவிலகளுக்கு காரணங்களாக
அமைந்துள்ளமையை கண்டறியப்பட்டுள்ளன. எனவே இலவசக் கல்வியின்
முக்கியத்துவத்தை உணர்த்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை பெற்றோர்களுக்கும்,
மாணவர்களுக்கும் நடத்துவதன் மூலம் மாணவர் இடைவிலகளை குறைக்க முடியும்