Abstract:
மாணவர்களிடத்தே மனவெழுச்சியானது திறன்களையும் ஆற்றல்களையும் எதிர்வு
கூறுவதற்கும் நிர்ணயம் செய்வதற்கும் சிறப்பான வழியாக அமைகின்றது. வாழ்க்கையை
மகிழ்ச்சிகரமானதும், இசைவானதாகவும் ஆக்கிக்கொள்வதற்குரிய ஏற்பாடுகளை
முன்னெடுப்பதற்கு இது உதவுகிறது. பிறரது உணர்வுகளை சரியாகவும் தவறாகவும்
விளக்கிக்கொள்வதற்கும் மனவெழுச்சி துணைபுரிகிறது. தவறான மனவெழுச்சிகளை
புரிந்து கொள்ளல் தவறான நடத்தைகளுக்கு இட்டுச்செல்லும் அனைத்து
மனவெழுச்சிகளிலும் உள்ளமைந்து காணப்படும் நேர்பண்புகளை விளங்கிக்கொள்ளல்
கற்றலுக்கு உறுதுணையாக அமைகின்றது. மனவெழுச்சிகளை முகாமை செய்யும்
திறன்கள் கற்றலுடன் ஒன்றிணைக்கும் போது வினையாற்றல் மேலோங்கும். மாணவர்கள்
வெளிப்படுத்தும் மனவெழுச்சிகளை ஒழுக்க வளர்ச்சியின் ஊடாக சிறப்பாக கட்டுப்படுத்த
முடியும். ஒழுக்க வளர்ச்சி, மனவெழுச்சி ஏற்படும் போது கட்டுப்படுத்தும் வழிமுறைகள்
எவை என கற்றுக்கொடுக்கின்றது. இல்லையேல் மாணவன் சிறப்பான கற்றலை
மேற்கொள்ள முடியாமல் போகும் போது கல்வி உளவியலை ஒரு ஆசிரியர் சிறப்பாக
கற்றிருப்பாராயின் மாணவன் எச்சந்தர்ப்பத்தில் மனவெழுச்சிப் பண்புகளை
வெளிப்படுத்துகின்றான் என அறிந்து சிறப்பான கற்பித்தலை மேற்கொள்ள முடியும்.
மாணவர்களின் அதிகளவான உடல், உள, மனவெழுச்சி வளர்ச்சியானது இந்தக்
கட்டிளமைப்பருவத்தில் ஆதிக்கம் செலுத்துகின்றது. மாணவர்கள் இப்பருவத்தின் சிக்கலான
மனவெழுச்சிப் பண்புகளை வெளிக்காட்டுவதற்கு சமூகக் கட்டுப்பாடு, சமயக் கட்டுப்பாடு
என்பன தடையாக அமைகின்றது. இதனை எதிர்க்க முயலும் போது தாம் வேறு விதமான
உள முரண்பாட்டிற்கு ஆளாகின்றனர். இதனை இனம் கண்டு நிவர்த்தி செய்யாவிடின்
மாணவர்கள் பிற்காலத்தில் நடத்தைப்பிறழ்வு கொண்டவர்களாக மாறக்கூடும். இதனால்
கற்றலானது பாதிப்படைகிறது. மனவெழுச்சியினை கட்டுப்படுத்தி வழிப்படுத்த வேண்டியது
ஆசிரியரின் கற்பித்தல் நுட்பமாகும் என்பதை எடுத்தியம்புவதாக மாணவர்களின்
மனவெழுச்சி வெளிப்பாடு கற்றலில் ஏற்படுத்தும் தாக்கம் எனும் இவ்வாய்வு கல்குடா
கல்வி வலய பாடசாலைகளின் சிரேஷ்ட இடைநிலை வகுப்புக்களிலுள்ள மாணவர்களை
மையமாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாய்வு ஒரு விபரண ஆய்வாகவும்
மாதிரிகள் எழுமாற்று அடிப்படையிலும் தெரிவு செய்யப்பட்டு பொருத்தமான தரவு
சேகரித்தற் கருவிகள் மூலம் தரவுகள் பெறப்பட்டு பகுப்பாய்வுக்குட்படுத்தப்பட்டு பெறப்பட்ட
முடிவுகள் முழுப்பாடசாலைகளுக்கும் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டுள்ளன.