Abstract:
இவ் ஆய்வானது மாஸ்லோவின் தேவைக் கோட்பாட்டை விளக்குவதுடன் அதில் அவர்
குறிப்பிடுகின்ற சுய முழுமைத் தேவை தொடர்பான விடயங்களை சிறப்பாக
ஆராயமுற்படுகின்றது. தேவை தொடர்பான கோட்பாடுகளும் அவற்றின் நடைமுறைப்
பிரயோகங்களும் மெய்யியல் மற்றும் உளவியல் பாடப்பரப்பில் முதன்மையாக
நோக்கப்படுகின்ற விடயங்களில் ஒன்றாகும். சமூகநலத்திட்டங்களிலும் இவற்றின் அவசியம்
உணரப்பட்டு வலியுறுத்தப்படுகினறது. மாஸ்லோ தனது தேவைக் கோட்பாட்டினை தூண்டுதல்
கோட்பாட்டின் ஒருபகுதியாக குறிப்பிடுகின்றார். தேவையும் தூண்டுதலும் மனிதநல
விருத்தியின் முக்கிய பகுதிகளாக உளவியலாளர்களினால் நோக்கப்படுகின்றது. மாஸ்லோ
தனது கோட்பாட்டை மனிதத் தேவைக் கட்டமைப்போடு இணைத்து விளக்குகின்றார்.
மனிதர்களது நடத்தையும் வாழ்வும் அவர்களது தேவை மற்றும் நிறைவு என்பனவற்றை
வைத்தே தீர்மானிக்கப்படுவதாக அவர் வலியுறுத்துகின்றார். இவ்வாய்வில் மாஸ்லோவின்
தேவைகள் தொடர்பான வரையறைகள் மனிதரது முழு நிலையோடு தொடர்புபடுத்தி எவ்வாறு
நோக்கப்படுகின்றது அத்துடன் அவற்றின் மூலம் பூரண மனிதர்களை உருவாக்க முடியுமா.
மாஸ்லோவினால் முன்வைக்கப்படும் மனித நிறைவுக்கான மாதிரிகள் என்ன அவர்
எவ்வாறான தீர்வுகளை முன்வைக்கின்றார் என்பதனையும் அவரால் முன்மொழியப்பட்ட
விடயங்களை விவாதிப்பதுடன் அவரால் கவனத்தில் கொள்ளப்படாத தற்கால மனிதர்களின்
தேவைகள் மற்றும் நடைமுறைச் சிக்கல்கள் என்பனவும் இதில் கவனத்தில்
கொள்ளப்படுகின்றது. இவ்வாய்வானது கருத்துநிலை பற்றிய ஒன்றாகஅமைகின்றது. இதில்
மாஸ்லோவின் கருத்துக்களையும் ஏனையோரின் கருத்துக்களையும் பகுப்பாய்வு மற்றும்
விபரண முறைகளுடாக நோக்கப்படுகின்றது. இவரது கோட்பாடு எவ்வாறு முழு நிறைவை
பிரதிபலிக்கின்றன என்ற கேள்வியை அடிப்படையாகக் கொண்டு ஆய்வாளனால்
சேகரிக்கப்பட்ட தகவல்களின் தொகுப்பாகவும், பகுப்பாகவுமே இதன் முறையியில்
அமைகின்றது. இந்தவகையில் மாஸ்லோவின் தேவைக் கோட்பாட்டில் வலியுறுத்தப்படும் சுய
முழுமைத் தேவைகளினூடான மனித முழு நிறைவு பற்றிய ஒரு தேடலாகவே இது
அமைகின்றது எனலாம்.