dc.description.abstract |
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் தொழில்
உற்பத்தியானது உச்ச நிலையை அடைந்துள்ளது. இதன் பேறாக உலக சுற்று சூழல்
நெருக்கடி தீவிரமாக மோசமடைந்ததுள்ளது. இந்த சுற்றுச்சூழல் நெருக்கடியைத் தீர்க்கும்
பொருட்டு அரசாங்கங்கள் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புக்கள் வல்லுனர்கள் தொழிநுட்ப
பணியாளர்கள் இது தொடர்பான ஆய்வுகளை வலியுறுத்தினர். இந்த அவசர தேவையை
பூர்த்தி செய்ய நிபுணர்கள் அதிகாரிகளின் வேண்டுதலை நாடி நின்றனர். எனினும் சில
நாடுகளின் சமூக பிரிவினருக்கிடையிலான நடத்தையில் சுற்றுச்சூழல் பிரச்சினைகள்
உள்ளதாக கண்டுபிடித்துள்ளனர். ஒவ்வொருவருக்கும் சூழல் நடத்தை தொடர்பாக ஒரு
சரியான புரிதல் இருக்க வேண்டும், அத்துடன் சுற்றுச்சூழல் நிபுணர்களால் இவற்றைத் தீர்க்க
முடியுமாகயிருந்தால் மட்டுமே இந்தப் பிரச்சினையைத் திறம்பட தீர்க்க முடியும் அவ்வாறு
இல்லாதவரை அவற்றைத் தீர்க்க முடியாது. சுற்றுச்சூழல் ஒழுக்கவியலின் முக்கியத்துவம்
சமீபத்திய காலங்களாகவே உலகம் முழுவதிலும் உணரப்படுகின்ற ஒன்றாக இருந்து
வருகின்றது. மனித நடவடிக்கைகளால் சூழலில் ஏற்பட்டுவரும் விரும்பத் தகாத
மாற்றங்களும், அதனால் ஏற்படுகின்ற பாதகமான விளைவுகளும், இது தொடர்பாக
நடவடிக்கைகளில் கவனம் செலுத்த வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியுள்ளன. உலக
சூழல் தின நிகழ்வுகளின் முக்கியமான நோக்கம், உலகம் தழுவிய அளவில் சூழலின்
முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், அரசியல் மட்டத்தில் கவனத்தை
ஈர்த்து, உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்குத் தூண்டுவதுமாகும். சூழல் தொடர்பான
விடயங்களில், மக்களுடைய மனப்போக்கில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு முக்கிய பங்காற்ற
வேண்டிய பொறுப்பு சமுதாயங்களுக்கு உண்டு என்ற புரிந்துணர்வை உருவாக்குதல்,
பாதுகாப்பானதும், வளமுள்ளதுமான எதிர்காலத்தை உறுதி செய்வதற்காகக் கூட்டு
முயற்சிகளில் ஈடுபடுவதை ஊக்குவித்தல் ஆகிய நடவடிக்கைகளை வெளிப்படுத்துவதனை
நோக்கமாகக் கொண்டு இவ்வாய்வு இடம்பெறுகிறது. இவ்வாய்வினைச் சரியான முறையில்
மேற்கொள்வதற்கு விபரண முறையியல் பயன்படுத்தப்படுவதோடு இவ்வாய்வுக்குரிய
தரவுகளாக, சுற்றுச் சூழல் ஒழுக்கவியலை அறிய உதவும் மூல நூல்கள், சுற்றுச்சூழல்
பிரகடனங்கள், சுற்றுச் சூழல் ஒழுக்கம் தொடர்பில் விவாதிக்கும் ஆய்வுக் கட்டுரைகள்,
சஞ்சிகைகள், இணையத்தளத் தகவல்கள் என்பனவற்றிலிருந்து தரவுகள் பெறப்பட்டு
இவ்வாய்வு வடிவமைக்கப்பட்டுள்ளது. |
en_US |