Abstract:
உடல், உளம் என்பன ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் போன்றது. மெய்யியல்
வரலாற்றில் உடல், உளம் தொடர்பான பிரச்சினை மிகவும் பிரதானமானதாகும்.
மிகத்தொன்மைக் காலம் முதல் இருந்தே இது தொடர்பான பிரச்சினைகள் விவாதத்திற்
கொள்ளப்பட்டன. கடந்த நூறு ஆண்டுகளில் உளவியலில் ஏற்பட்ட வளர்ச்சியும், கடந்த
ஐம்பது ஆண்டுகளில் நரம்பியலில் விஞ்ஞானத்தில் ஏற்பட்ட வளர்ச்சியும்
இப்பிரச்சினையினைத் தீர்த்ததா என்ற நோக்கில் உளவியலாளரான து.டீ. வொட்சனின்
நடத்தைவாத விளக்கம் வேறொரு நிலைப்பாடான சடநிலைப் பௌதீக அதீதத்தினை
நோக்கி நகர்கிறது. இதனை மையமாகக் கொண்டே இவ்வாய்வு அமைகிறது.