dc.description.abstract |
மத்திய மாகாண மாத்தளை மாவட்டத்தில் இரத்தொட்டை பிரதேச செயலகத்திற்கு
உட்பட்ட பிரதேசத்தில் பிரசித்தி பெற்ற ஒரு பயிர்ச்செய்கையாக இச் சிறு ஏற்றுமதிப்
பயிர்ச்செய்கைக் காணப்படுகின்றது. கொக்கோ, கறுவா, மிளகு, கராம்பு போன்ற
இன்னோரன்ன பயிர்கள் நாட்டப்படுகின்றன. இந்த பயிர்ச்செய்கை இன்று பல்வேறுபட்ட
மானிடக்காரணிகளால், அதன் உற்பத்தியாளர்களால் கைவிடப்படக்கூடிய நிலையில்,
உற்பத்தி அருகி வருகின்றது. இதனால் இப்பயிர்களின் கேள்வி இன்று அதிகரித்து
வருகின்றது. இப்பிரதேசத்தில் சிறு ஏற்றுமதி பயிர்கள் எதிர்கொள்ளும் சவால்களை
இனங்காண்பதை பிரதான நோக்காகவும், அதனை ஓரளவேனும் குறைத்து இப்பயிர்ச்
செய்கை பழைய நிலையை அடைவதற்கான ஆலோசனைகளை முன்வைப்பதையும்,
இப்பயிர்ச்செய்கை அருகி வருவதால் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை
இனங்காணலையும் துணை நோக்காக கொண்டு இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் இவ்வாய்வின் முதல் நிலைத்தரவு சேகரிப்பு முறைகளாக நேர்க்காணல்,
கலந்துரையாடல், மற்றும் வினாக்கொத்துகளை பகிர்ந்தளித்தல் மூலமும், இரண்டாம்
நிலைத் தரவுச் சேகரிப்பு முறைகளாக சிறு ஏற்றுமதி பயிர்செய்கை ஆராய்ச்சி
நிலையத்தால் வழங்கப்பட்ட பதிவேடுகள், இணையம் ஆகியவற்றின் மூலமும் தரவுகள்
சேகரிக்கப்பட்டன. இத்தரவுகளானது Microsoft Excel, Arc GIS 10.1 போன்ற கணனி மென்
பொருட்கள் பயன்படுத்தப்பட்டு பகுப்பாய்வு செய்யப்பட்டதுடன், இவ்வாய்வின் முடிவாக
அருகி வரும் சிறு ஏற்றுமதி பயிர்களை இனங்கண்டு அருகிவருவதற்கான காரணிகளைக்
கண்டறியக்கூடியதாக இருந்தது. மேலும் அக்காரணிகளை ஓரளவேனும் குறைத்து
உற்பத்தியை அதிகரிப்பதற்கான ஆலோசணைகளை முன்வைக்க கூடியதாக இருந்தது. |
en_US |