Abstract:
இன்று வங்கிகளினதும், நிதி நிறுவனங்களினதும் உற்பத்தி மற்றும் சேவைகள்
கிராமப்புற மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்றவைகளாகக் காணப்படுவதனால்
அம்மக்கள் தங்களது வங்கித் தேவைகளுக்காக வங்கிகளை பயன்படுத்துவது
என்பது நாளுக்கு நாள் அதிககரித்துக் கொண்டு வருவதனை மறுக்க முடியாது.
பாரம்பரிய வங்கிகளின் தோற்றத்தின் பின்னர் இஸ்லாமிய வங்கிகளும் தோற்றம்
பெற்றுள்ளன. குறிப்பிட்ட ஆய்வுப் பிரதேசத்தில் கிராமப்புற மக்கள் வங்கி
நடவடிக்கைகளுக்கு இஸ்லாமிய நிதி நிறுவனங்களுடன் கொண்டுள்ள தொடர்பு
மட்டத்தை கண்டறிதல், கிராமப்புற மக்களுக்கு இஸ்லாமிய நிதி நிறுவனங்கள்
மீதுள்ள உறவில் செல்வாக்குச் செலுத்தும் காரணங்களை இனங்காணல் மற்றும்
இஸ்லாமிய வங்கிகள் தொடர்பாக கிராமப்புறமக்கள் எதிர்நோக்கும் சவால்கள்
போன்ற விடயங்களை கண்டறிவதனையும் நோக்கமாகக் கொண்டு இவ்வாய்வு
மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாய்வானது முதலாம் நிலைத் தரவுகளான
வினாக்கொத்து மற்றும் நேர்காணல் என்பவற்றை மையமாகக் கொண்டு
மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆய்விலிருந்து கிராமப்புற மக்கள் இஸ்லாமிய
வங்கிகளின் உற்பத்தி, சேவைகள் மீதும் இஸ்லாமிய நிதி நிறுவனங்கள் தொடர்பு
வைத்துள்ள நிறுவனங்கள்மீதும் தெளிவற்றவர்களாக காணப்படும் அதேவேளை
கிராமப்புற பகுதிகளில் இஸ்லாமிய நிதி நிறுவனங்கள் மிகக் குறைவு என்பதனையும்
மறுப்பதற்கில்லை. மேலும், பொருளீட்டல் தொடர்பான இஸ்லாமிய நோக்கினைத்
தெளிவுபடுத்தியும், கிராம மக்கள் இஸ்லாமிய வங்கிகளுடன் நெருக்கமான
உறவினை பேணுவதற்கான ஆலோசனைகளை வழங்குவதனையும் கருத்திற்
கொண்டுள்ளது.