Abstract:
இக்கட்டுரையானது ஜோன் ரோல்ஸ்ஸின் சமூக நீதி பற்றிய அணுகுமுறை குறித்த பிரச்சினையை பகுப்பாய்வு செய்வதாக அமைகின்றது. ரோல்ஸ் தனது கோட்பாட்டில் சமூக நீதி மூலம், சமூகத்தில் நியாயம் எனும் கருத்தையும் முன்வைக்கிறார். சமூகத்தின் அடிப்பை நிறுவனங்களானது சுதந்திரக் கோட்பாடு, வேறுபாட்டுக் கோட்பாடு என்ற கோட்பாடுகளால் முறைப்படுத்தப்பட வேண்டும் என வாதிடுகின்றார். இந்த வகையில் ரோல்ஸ்ஸின் நீதி பற்றிய ஆய்வின் எல்லைப்பரப்பு, நீதி பற்றிய கோட்பாடுகள், அவற்றை அடைவதற்கான வழிமுறை ஆராய்ச்சிகள் என்பன முக்கியமானவையாக காணப்படுகின்றன. இக்கட்டுரைக்கான தரவுகள் நூல்கள், ஆய்வுக்கட்டுரைகள், இணையத்தளங்கள் போன்றவற்றிலிருந்து பெறப்பட்டன. சமூகக் கட்டமைப்பின் பிரதான தொழிற்பாடு நற்பலன்களை சமூக அங்கத்தவர்களுக்குப் பகிர்ந்தளிப்பதாகும். நீதி பற்றிய கோட்பாடு சமூகத்தின் அடிப்படைக் கட்டமைப்பு பற்றி பேசுகின்றது. மாறாகத் தனிநபர் ஒழுக்கப்பண்பு பற்றியதல்ல என்பதும் இக்கட்டுரை மூலம் கண்டறியப்பட்டுள்ளது.