Abstract:
இக்கட்டுரையானது உளமெய்யியல் தொடர்பான விடயத்தில் இந்திய சிந்தனை வரலாற்றில் திருவள்ளுவரின் திருக்குறளை தொடர்புபடுத்தி ஆய்வு செய்கின்றது. உலகில் உயிரினம் தோன்றியது முதல் உள்ளமும் அதனுடன் இணைந்த வகையில் பரிணாமவளர்ச்சி அடைந்தது. மனித இனம் விலங்கு இனத்தை விட மேம்பட்ட இனம் ஆகும். விஞ்ஞானமும் தொழிநுட்பமும் இவ்வாறு வளர்ந்துள்ளது என்றால ;அதற்கு முக்கிய காரணம் மனிதன்தான். மனிதன் அவனது முயற்சியாலும் திறனாலும் பற்பல தொழிநுட்ப சாதனங்களை உருவாக்கி இருக்கிறான் இந்த செயற்பாடுகள் அனைத்துக்கும் காரணம் தனிமனித ஆளுமைப் பண்பேயாகும். ஆளுமைப் பண்பு ஒரு மனிதனை பிறரிடமிருந்து பிரித்துக்காட்டும் தனித்துவமானதாகும். நமது எண்ணம் உணர்ச்சிகள், பேச்சு, செயல்கள் மூலம்தான் ஆளுமைப் பண்பு வெளிப்படுகின்றது. தமது சுற்றுச் சூழலுக்கு ஏற்றபடி இணக்கமாக நடந்து கொள்வதையும், நாம் சமூகத்தில் இணக்கமாக நடந்து கொள்வதையும், சமுதாயத்தில் தமக்குரிய மதிப்பினையும் தமது நல்வாழ்வினையும் தமது ஆளுமைப் பண்பு நிர்ணயிக்கிறது. தமது மதிப்புக்கள் நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்புக்களை நமது ஆளுமைப் பண்பு நிர்ணயிக்கின்றது. ஒருவரது ஆளுமைப் பண்பை நிர்ணயிக்கும் காரணிகளில் பாரம்பரியம், சூழல், சமூகவியல், ஆத்மீகம், உளவியல் போன்ற பல காரணிகள் செல்வாக்கு செலுத்துவதாக உளவியலாளர்கள் கூறுகின்றனர். இந்த நோக்கில் திருக்குறளில் திருவள்ளுவர் ஆளுமை என்பதை எவ்வாறான முறையில் விளக்குகிறார் என்பதை ஆராய்வது அவசியமானது. இதற்காக என்னால் பல்வேறு ஆய்வு முறையியல்கள் பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பாக பகுப்பாய்வு, ஒப்பீட்டு, விவரணமுறையியல் என்பவற்றோடு பல நூல்களும், சஞ்சிகைகளும், இணையத்தளத் தரவுகளும் என்னால் பயன்படுத்தப்பட்டு இவ்வாய்வு மேற்கொள்ளப்படுகிறது.