| dc.contributor.author | சசிவதனி, த. | |
| dc.contributor.author | நுபைல், அ.அ.மு. | |
| dc.date.accessioned | 2017-02-02T10:17:28Z | |
| dc.date.available | 2017-02-02T10:17:28Z | |
| dc.date.issued | 2013-06 | |
| dc.identifier.citation | Kalam, Research Journal of Faculty of Arts and Culture, 6: 225-238. | en_US |
| dc.identifier.issn | 1391- 6815 | |
| dc.identifier.uri | http://ir.lib.seu.ac.lk/handle/123456789/2223 | |
| dc.description.abstract | பிராந்திய அபிவிருத்தியை ஏற்படுத்துவதன் ஊடாக பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்தலாம் என்ற எண்ணக்கரு 1990 களில் வலுப்பெற்றதையடுத்து பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்தும் ஓர் அபிவிருத்திக் கருவியாக வங்கிகள் சர்வதேச ரீதியில் பிரபல்யமும் உருமாற்றமும் பெற்றன. இதில், வறிய மக்களின் வருமானத்தையும், வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்தவதன் மூலமாக பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்துவதே பிரதான நோக்கமாகும். இவ் ஆய்வானது கோறளைப்பற்று பிரதேசத்தின் அபிவிருத்திக்கு இலங்கை மக்கள் வங்கியின் பங்களிப்பு எவ்வாறாக அமைந்துள்ளது என்பதனைக் கண்டறியும் பிரதான நோக்கத்தைக் கொண்டுள்ளது. அத்துடன், ஆய்வுப் பிரதேசத்தின் சமூகப் பொருளாதார நிலமைகளினைக் கண்டறிவதோடு பிராந்திய அபிவிருத்தியை ஏற்படுத்துவதில் மக்கள் வங்கி எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மேலும், பிராந்திய அபிவிருத்தியை மேம்படுத்தும் வகையில் மக்கள் வங்கியினால் முன்னெடுத்துச் செல்லப்படவேண்டிய வழிமுறைகளை முன்வைத்தல் போன்ற துணை நோக்கங்களையும் கொண்டுள்ளது. ஆய்வு நுட்பமாக எண், பண்பு ரீதியான தரவுகளை அடிப்படையாகக் கொண்டு எளிய புள்ளிவிபரவியல் மாதிரிகள் மூலம் ஒப்பீட்டுப் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளன. இவ் ஆய்வின் மூலம் கோறளைப்பற்று பிரதேச அபிவிருத்தியில் மக்கள் வங்கியானது கணிசமான அளவு முன்னேற்றத்தை ஏற்படுத்தியிருந்தாலும், இவை ஒப்பீட்டளவில் குறைவாகவே காணப்படுகின்றன. இப்பிரதேசத்தை அபிவிருத்தியடையச் செய்ய வேண்டுமாயின், மக்கள் வங்கி அதன் சேவைகள் குறித்து மக்களுக்கு தெளிவாக விளக்குவதுடன் அவற்றின் கட்டமைப்புரீதியான மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலம் மக்களை ஊக்குவித்து பொருளாதாரரீதியில் மாற்றங்களை ஏற்படுத்தலாம் என்பதை முக்கிய கொள்கையாக இவ்வாய்வு முன்வைக்கின்றது. | en_US |
| dc.language.iso | other | en_US |
| dc.publisher | Faculty of Arts and Culture, South Eastern University of Sri Lanka | en_US |
| dc.subject | அபிவிருத்தி | en_US |
| dc.subject | கட்டமைப்பு மாற்றம் | en_US |
| dc.subject | வங்கி | en_US |
| dc.subject | கோரளைப்பற்று | en_US |
| dc.title | கோறளைப்பற்று பிரதேச அபிவிருத்தியில் மக்கள் வங்கியின் பங்களிப்பு: யுத்தத்திற்குப் பின்னரான ஒரு விவரண ஆய்வு | en_US |
| dc.type | Article | en_US |