Abstract:
ஒரு சமூகம் பல காரணங்களால் எதிர்நோக்கும் யுத்தத்தின் தாக்கம் யுத்தம்
நிறைவடைந்த பின்னரும் அச்சமூகத்தில் நிலைத்து நிற்கும். அத்தகைய தாக்கங்களை
மக்களிடமிருந்து நீக்குவதில் பல தரப்பினரும் முன்னின்று செயற்படுவர். ஆனால்
அச்சமூகஞ்சார் சமய நிறுவனங்களே சிதைந்து போன தமது சமூகத்தின் கட்டமைப்பின்
மீளாக்கத்திற்கு தமது உண்மையான உழைப்பினைக் கொடுக்கின்றன. பல்லினத்தையுஞ்
சார்ந்த மக்களின் இருப்பிடமாவுள்ள இலங்கையின் கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு,
திருகோணமலை, அம்பாறை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியது. இலங்கையில்
நடைபெற்ற யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மாகாணங்களில் கிழக்கு மாகாணமும் ஒன்று.
இம்மாகாணத்தில் யுத்தத்திற்கு பின்னரான சமூகக் கட்டமைப்பில் இந்துமத நிறுவனங்களின்
வகிபங்கு பற்றி இவ்வாய்வு அலசுகின்றது.
கிழக்கு மாகாணத்தில் யுத்தத்திற்கு முன்னரும், அதற்குப் பின்னரும் பல இந்துசமய
நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இருப்பினும் ஆய்வின் விரிவஞ்சி, ஆய்வின் மைய
விடயத்தை நிறுவும் பொருட்டு‚ “சிவன் மானுட மேம்பாட்டு நிறுவனம்” (ளுiஎயn ர்ரஅயn
னுநஎநடழிஅநவெ யுளளழஉயைவழைn) எனும் நிறுவனம் ஆய்வின் மாதிரியாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.
இதன் சமூகஞ்சார் செயற்பாடுகள் பகுப்பாய்வு செய்யப்பட்டு யுத்தத்திற்கு பின்னரான
சமூகக்கட்டமைப்பில் இத்தகைய நிறுவனங்களின் வகிபங்கையும், தேவையையும் இவ்வாய்வு
மதிப்பீடு செய்கின்றது.