Abstract:
அரசியல்சார் கல்வித் துறையினை விஞ்ஞான ரீதியானதாக மாற்றுவதற்கான முயற்சிகள் தற்கால அரசியல்
சிந்தனையாளர்களால் முன்னெடுக்கப்பட்டு வந்தன. அம்முயற்சிகளின் வெளிப்பாடாக நடத்தைவாதம்
தோற்றம் பெற்றது. ஒரு இயக்கமாக் புரட்சியாக் அணுகுமுறையாக் கோட்பாடாக அடையாளப்படுத்தப்படும்
இந்நடத்தைவாத மரபு இரண்டாம் உலக மகா யுத்தத்திற்குப் பின்னரே பிரபல்யமடைந்தது. பின்நாட்களில்
இம்மரபில் ஏற்பட்ட வளர்ச்சிகள் அதுசார்ந்த புதிய சீர்திருத்தப் பகுதியொன்று உருவாக வழிவகுத்தது.
இச்சீர்திருத்தப் பகுதி பின்வந்த நடத்தைவாதம் என அழைக்கப்படுகின்றது. இப்புதிய மரபு பழைய மரபினை
கடுமையாகச் சாடியதுடன் அரசியல் விஞ்ஞானத்தில் புதிய கோட்பாட்டுத் தளங்கள் உருவாகவும்
வழிவிட்டது. இவ்விரு நடத்தைவாத மரபுகளும் தமக்கிடையே தெளிவான வேறுபாடுகளை வெளிப்படுத்தி
நின்றதுடன் அரசியல் விஞ்ஞானக் கல்வி வளர்ச்சிக்கு தொடர்தேர்ச்சியான பங்களிப்பினை
வழங்கிவருகின்றன. இப்பின்புலத்தில் இக்கட்டுரை நடத்தைவாதம், பின்வந்த நடத்தைவாதம் ஆகிய இரு
கோட்பாட்டு மரபுகளை பரிசீலித்து அவ்விரு மரபுகளும் அரசியல் விஞ்ஞானக் கல்விக்கு வழங்கிய
பங்களிப்பினை மதிப்பீடு செய்கின்றது. இக்கட்டுரைக்கான தரவுகள் புலமைசார் இலக்கியங்களிலிருந்து
பெறப்பட்டுள்ளதுடன் பகுப்பாய்வும் முடிவுகளும் விபரிப்புமுறையில் தரப்பட்டுள்ளன.