dc.contributor.author |
ஆலிப், எஸ்.எம். |
|
dc.date.accessioned |
2017-02-03T10:44:33Z |
|
dc.date.available |
2017-02-03T10:44:33Z |
|
dc.date.issued |
2015-06 |
|
dc.identifier.citation |
Kalam: Research Journal of Faculty of Arts & Culture, 9(1): 44-53. |
en_US |
dc.identifier.issn |
1391-6815 |
|
dc.identifier.uri |
http://ir.lib.seu.ac.lk/handle/123456789/2254 |
|
dc.description.abstract |
இலங்கை பன்மைத்துவப் பண்புகளைக் கொண்ட சமூகமுடைய நாடாகும். இங்கு நீண்ட காலமாகவே
மக்கள் தமது பன்மைத்துவத்தைப் பேணுவதில் அக்கறை கொண்டவர்களாகவே உள்ளனர். நாட்டின்
பெரும்பான்மை மக்கள் பௌத்த மதத்தையும் ஏனையவர்கள் இந்து, இஸ்லாம், மற்றும் கிறிஸ்தவம் ஆகிய
மதங்களையும் முறையே பின்பற்றுகின்றனர். இலங்கையின் அரசியலைப் பொறுத்தவரை மதம் என்ற காரணி
தவிர்க்க முடியாததாக உள்ளதை அவதானிக்கலாம். எனினும் மூன்று தசாப்த கால யுத்தத்திற்குப் பின்னர்
மீள் குடியேற்றம், புனர்வாழ்வு, உட்கட்டமைப்பு, சுய தொழில் ஊக்குவிப்பு, மீள்ஒருங்கிணைவு போன்ற பல
சாதகமான அபிவிருத்திகள் ஏற்படுத்தப்பட்ட போதும் மத அடிப்படைவாதக் குழுக்களின் திடீர் எழுச்சியானது
மீண்டும் இலங்கையில் சிறுபான்மையினர் மத்தியில் பதட்டத்தை உருவாக்கியுள்ளது. பொதுவாக மதம்
சகிப்புத் தன்மையை வலியுறுத்துவதாக இருந்தபோதும் யுத்தத்திற்குப் பின்னரான இலங்கையில் பௌத்த
மதவாத அமைப்புக்களின் செயற்பாடுகள் சகிப்புத் தன்மையைப் புறக்கணிப்பதுடன் அரசியலிலும்
செல்வாக்குச் செலுத்துகின்றமையே ஆய்வுப் பிரச்சினையாகும். இவ்வாய்வானது யுத்தத்திற்குப் பின்னரான
இலங்கை அரசியலில் மதம் என்ற காரணியை விஷேடமாக பொது பல சேனாவுடன் மையப்படுத்தி
ஆராய்கின்றது. இதற்காக சுதந்திர இலங்கையின் அரசியலில் மதத்தின் தாக்கம் குறித்த வரலாற்றை
சுருக்கமாக மீள் நோக்குவதாகவும் இவ்வாய்வு அமைகின்றது. யுத்தத்திற்குப் பிந்திய இலங்கையில் பொது
பல சேனாவின் தோற்றம், செயற்பாடுகள் குறித்தும் அவை அரசியலில் செல்வாக்குச் செலுத்தும் விதம்
என்பவற்றைக் கண்டு கொள்வதும் ஆய்வு நோக்கங்களாக உள்ளன. இவ்வாய்வானது பண்பு ரீதியான
விபரணப் பகுப்பாய்வாகக் காணப்படுவதுடன் இதற்கான தரவுகள் இரண்டாம் நிலைத் தரவுகளிலிருந்து
பெறப்பட்டுள்ளன. பொது பல சேனா அமைப்பானது யுத்தத்திற்குப் பிந்திய இலங்கையின் உருவாக்கமாக
இருப்பதுடன் அது பௌத்த கருத்தியலைப் பாதுகாத்துப் பேணல் என்பதை நோக்கமாகக் கொண்டது.
எனினும் அதன் செயற்பாடுகள் சிறுபான்மையினருக்கு குறிப்பாக முஸ்லிம்களுக்கு எதிராகவும்
அச்சுறுத்தலாகவும் காணப்படுவதுடன் இது தொடர்பான அரசாங்கத்தின் பதலீடுகள் குறைந்தளவிலேயே
காணப்படுகின்றன. மதப் பின்புலத்தை கொண்டதாக இவ்வமைப்பு இருப்பினும் அரசியலில் பல்வேறு
வழிகளில் தொடர்பு கொண்டிருப்பது பகுப்பாய்வின் மூலம் அறிந்து கொள்ள முடிகின்றது. இது திரும்பவும்
முஸ்லிம் சிறுபான்மையினரை முரண்பாட்டுக்குள் இட்டுச் செல்லவும் வழி ஏற்படுத்தலாம் என்ற
சந்தேகத்தையும் ஏற்படுத்துகின்றது. |
en_US |
dc.language.iso |
other |
en_US |
dc.publisher |
Faculty of Arts & Culture, South Eastern University of Sri Lanka |
en_US |
dc.subject |
பொது பல சேனா |
en_US |
dc.subject |
யுத்தத்திற்குப் பின்னரான இலங்கை |
en_US |
dc.subject |
மத அடிப்படைவாதம் |
en_US |
dc.subject |
முஸ்லிம் சிறுபான்மையினர் |
en_US |
dc.title |
யுத்தத்திற்குப் பின்னரான இலங்கை அரசியலில் மதம்: விஷேட ஆய்வு பொது பல சேனா |
en_US |
dc.type |
Article |
en_US |