SEUIR Repository

மீள்குடியேற்றத்தின் பின்னர் ஏற்பட்டுள்ள வாழ்வாதாரப் பிரச்சினைகள்: ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவினை அடிப்படையாகக் கொண்ட ஓர் ஆய்வு

Show simple item record

dc.contributor.author உதயராசா, சுபாஜினி
dc.date.accessioned 2017-02-03T10:45:00Z
dc.date.available 2017-02-03T10:45:00Z
dc.date.issued 2015-06
dc.identifier.citation Kalam: Research Journal of Faculty of Arts & Culture, 9(1): 35-43. en_US
dc.identifier.issn 1391-6815
dc.identifier.uri http://ir.lib.seu.ac.lk/handle/123456789/2255
dc.description.abstract வாழ்வாதாரம் என்பது வாழ்க்கைத் தேவையைப் பூர்த்தி செய்வதற்கான ஒரு மூலமாகும். நிலைத்துநிற்கக்கூடிய வாழ்வாதாரமானது தனிப்பட்டவர்கள் ஒவ்வொருவரும் அவர்களுடைய வாழ்வாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு அடிப்படையாக அமையும் இயற்கை, சமூக பௌதிக, மானிட மற்றும் நிதி மூலதனம் ஆகிய ஐந்து சொத்துக்களில் தங்கியுள்ளது.(Kristjanson, et al., 2005) நிலைத்துநிற்கக் கூடிய வாழ்வாதார உத்திகளும், சொத்துக்களும் வறுமையான மக்களின் வாழ்வாதாரத்தில் சுற்றுச்சூழல்வளங்களின் பங்கினை மிகவும் ஆழமாக ஆராய்வதற்கான ஒருவழியை வழங்குகின்றது. இலங்கையில் குறிப்பாக வடக்குகிழக்கு மக்களின் வாழ்வாதாரமானது மீள்குடியேற்றத்தின் பின்னர் பல்வேறு சிக்கல்களுக்கும், பிரச்சினைகளுக்கும் உள்ளாகியுள்ளது. முல்லைத்தீவுமாவட்டத்தின் ஒரு பிரதேசசெயலர் பிரிவாகிய ஒட்டுசுட்டான்பிரதேசசெயலர் பிரிவிலுள்ள 27 கிராமமக்களும் 2009ஆம் ஆண்டு நிகழ்ந்த இறுதிக்கட்டயுத்தித்தினால் முழுமையாக தமது உடமைகளை இழந்து இடம்பெயர்ந்து நலன்புரிமுகாம்களில் வசித்துவந்தார்கள். இவர்கள் மீளவும் 2010ஆம் ஆண்டு தமது சொந்தப் பிரதேசங்களில் மீள்குடியமர்த்தப்பட்டனர். அவ்வாறு மீள்குடியேற்றம் செய்யப்பட்ட மக்கள் தமது வாழ்வாதாரத்தை கட்டியெழுப்புவதற்காக மிகவும் துன்பப்பட்டார்கள். இந்தவகையில் ஒட்டுசுட்டான் பிரதேசசெயலர் பிரிவிலுள்ள மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளையும் அவற்றிக்கான காரணங்களையும் கண்டறிவதோடு அப்பிரச்சினைகளுக்கான தீர்வுகளையும் ஆலோசனைகளையும் முன்வைத்தலே இவ் ஆய்வின் நோக்கமாகும். இங்கு 5585 குடும்பங்களில் 3175 குடும்பங்கள் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ்கின்றார்கள். இவர்களில் 960 குடும்பங்கள் எல்லா கிராமசேவகர் பிரிவுகளையும் உள்ளடக்கும் வகையில் எழுமாற்றாக தெரிவுசெய்யப்பட்டு வினாக்கொத்துக்கள் வழங்கப்பட்டு தரவுகள் சேகரிக்கப்பட்டன. அத்துடன் நேரடிஅவதானம் பேட்டிகாணல், குழுநிலை விவாதங்கள் கலந்துரையாடல்கள் போன்ற முறைகள் மூலமும் தரவுகள் சேகரிக்கப்பட்டன. இத்துடன் இரண்டாம் நிலைத்தரவுகளும் சேகரிக்கப்பட்டு பெறப்பட்ட தரவுகளானது கணனி மூலம் குறிப்பாக Excel Package மூலமும், எளியபுள்ளிவிபரவியல் முறை மூலமும் பகுப்பாய்விற்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாய்வில் பெறப்பட்ட தரவுகளின் பகுப்பாய்வுகள் மூலம் பெறப்பட்ட முடிவுகளின்படி மூலதனப்பற்றாக்குறை, வீட்டுவசதிபோதியளவுயின்மை, மலசலகூட வசதிகள்யின்மை, சுயதொழில் வாய்ப்புக்களுக்கான ஊக்குவிப்புவசதிகள் குறைவாக உள்ளமை சேமிப்புபழக்கம்யின்மை, கடன்வசதிகள்குறைவு போன்றன முக்கிய பிரச்சினைகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இவற்றிற்கான தீர்வுகளாக அரசும், அரசசார்பற்ற நிறுவனங்களும் இப்பிரதேச மக்களுக்கு வீட்டுவசதிகளையும், மலசலகூட வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். சுயதொழில் வாய்ப்புக்களை உருவாக்கிக் கொடுப்பதோடு ஏற்கனவே உள்ள முயற்சிகளுக்கு ஊக்குவிப்புக்களை செய்தல் வேண்டும். குறைந்த வட்டிவீதத்திலான கடன்வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்து இலகுவான தவணைமுறைகளில் அவற்றினை மீளசெலுத்தவழிகளை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும். நிலமற்றவர்களுக்கு சொந்தமாக நிலம் கிடைக்க ஆவன செய்தல்வேண்டும். இவ்வாறு செயற்படுத்துவதன் மூலம் ஆய்வுப்பிரதேச பிரச்சினைகளுக்கு ஓரளவேனும் தீர்வினை பெறமுடியும் என்ற நிலையினை இவ் ஆய்வு வெளிக்கொணர்கின்றது. en_US
dc.language.iso other en_US
dc.publisher Faculty of Arts & Culture, South Eastern University of Sri Lanka en_US
dc.subject வாழ்வாதாரம் en_US
dc.subject மீள்குடியேற்றம் en_US
dc.subject கிராம சேவகர் பிரிவு en_US
dc.subject வறுமைக்கோடு en_US
dc.subject பிரதேச செயலர் பிரிவு en_US
dc.title மீள்குடியேற்றத்தின் பின்னர் ஏற்பட்டுள்ள வாழ்வாதாரப் பிரச்சினைகள்: ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவினை அடிப்படையாகக் கொண்ட ஓர் ஆய்வு en_US
dc.type Article en_US


Files in this item

This item appears in the following Collection(s)

Show simple item record

Search SEUIR


Advanced Search

Browse

My Account