Abstract:
கடந்த சில தசாப்தங்களாக இலங்கையில் சமூகவலையத்தளங்களானது பல்வேறு
எதிர்மறையான தாக்கங்களை முஸ்லிம் இளைஞர்ஹைகளுக்கு மத்தியில் ஏற்படுத்தி
வருகின்றன. எனவே இத்தகைய இனளஞர்களினுடைய கல்வி, கலஈசார, சமூக,
சமய, பொருளாதார, உளவியல் போன்றனவைகளில் இச்சமூக வலைத்தளங்களானது எத்தகைய எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தி வருகின்றன என்பதைக் கண்டறிவதே இவ்வாய்வின் ஆய்வுப்
பிரச்சினையாக காணப்படுகிறது. இதன் பின்னணியில் இவ்வாய்ய்னவானது “சமூகவவையத்தளங்கள் முஸ்லிம் இளைஞர்கள் மத்தியில் ஏற்படுத்திவரும் எதிர்மறையான தாக்கங்கள் நிந்தவூர் பிரதேசத்னத மையப்படுத்தியதோர் ஆய்வு” எனும் தலைப்பில் நிந்தவூர்ப் பிரதேசத்தில்
சமூக வலைத்தளங்களானவை முஸ்லிம் இளைஞர்கள் மத்தியில் ஏற்படுத்திவரும் எதிர்மறையஈன தாக்கங்கனள அனடயாளம் காணல் என்ற பிரதான நோக்கத்தினை அடிப்படையாக னவத்து ஆராய்கிறது.
இது ஒரு பண்புசார் ஆய்வு என்பதால் முதலாம், இரண்டாம் நிலைத்தரவுகளானது தரவு சேகரிப்பதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன. கலந்ளோதுரையாடல், நேர்காணல், அவதானம், வினாக்கிகொத்யது ஆகிய வழிகளில் முதலாம் நிலைத்தரவுகள் பெறப்பட்டடு பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளன. வினாகொத்தானது ஆய்வுப் பிரதேசத்தில் எழுமாறாகத் தெரிவு செய்யப்பட்ட 100 முஸ்லிம் இளைஞர்களிடத்தில் வழங்கி மேலதிகத் தகவல்கள் பெறப்பட்டுள்ளன. ஆய்வுத் தனலப்புடன் தொடர்பான நூல்கள், சஞ்சிகைகள்,
ஆய்வுக் கட்டுரைகள், இணையத்தளங்கள், ஓளி, ஒலி நாடாக்கள், பிரதேச செயலகத்திலிருந்து பெறப்பட்ட தகவல்கள் போன்றவற்றிலிருந்து இரண்டாம் நிலைத்தரவுகள் பெறப்பட்டுள்ளன.MS-Excel மென்பொருளானது வீதங்கள் கண்டறிவதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன. கோட்பாடு விடயங்களை முன்வைப்பதற்கு இரண்டாம் நிலைத்தரவுகள் அதிகம் பயன்பட்டுள்ளன.
இவ்வாய்வின் மூலமாக நிந்தவூர் பிரதேசத்தில் வாழும் முஸ்லிம் இளைஞர்கள் பேஸ்புக், ட்வீட்டர். யூ டியுப் போன்ற சமூக வலைத்தளங்களை மிகக்கூடுதலாக பயன்படுத்தி வருவதோடு இப்பிரதேசத்தில் சமூக வலைத்தளங்கள் முஸ்லிம் இளைஞர்கள் மத்தியில் எதிர்மறையான தாக்கங்களை அதிகம் ஏற்படுத்தி வருகின்றன. இருந்த போதிலும் அத்தகைய எதிர்மறையான தாக்கங்களை அவ்விளைஞர்களின் கல்வி. கலாச்சார, சமய, உள, சமூக, பொருளாதாரம் போன்றவைகளில் ஏற்படுத்தி வருகின்றன என்பதும் இவ்வாய்வில் கண்டறியப்பட்டது.