dc.description.abstract |
இலங்கையில் வளர்ச்சியடைந்துவரும் ஒருதுறையாக இஸ்லாமிய வங்கிமுறை காணப்படுகிறது.
வங்கித்துறையின் வளர்ச்சியில், அதுகுறித்து மக்கள் மத்தியில் காணப்படும் விழிப்புணர்வானது
பாரியதாக்கம் செலுத்தவல்லது. அந்தவகையில் இஸ்லாமிய வங்கி முறை குறித்து, கற்றறிந்த
சமூகப் பிரிவான ஆசிரியைகள் மத்தியில் காணப்படும் விழிப்புணர்வு மட்டத்தினை அறிவது
இவ்வாய்வின் பிரதான குறிக்கோளாக உள்ளது. அத்தோடு, இத்துறைபற்றிய விழிப்புணர்வினை
ஏற்படுத்தும் வினைத்திறன்மிக்க வழிமுறையினை இனங்காண்பதும் இவ்வாய்வு நோக்கமாகக்
கொண்டுள்ளது. அடிப்படையில் பண்புரீதியான இவ்வாய்வானது தொகைரீதியான தரவுகளையும்;
பயன்படுத்தியுள்ளது. இவ்வாய்வில் முதன்மைத் தரவுகள், கல்முனை முஸ்லிம் பிரதேச செயலக
பிரிவுக்குட்பட்ட 200 ஆசிரியைகளிடமிருந்து அளவியல், வினாக்கொத்து மூலம் திரட்டப்பட்டு,
MSExcel, SPSS ஆகிய மென்பொருட்களைப் பயன்படுத்தி பகுப்பாய்வுசெய்யப்பட்டுள்ளன. மேலும்
இவ்வாய்வின் கோட்பாடு அமைப்புத்திட்;டத்தினை வடிவமைப்பதற்காக புத்தகங்கள், சஞ்சிகைகள்,
ஆய்வுக்கட்டுரைகள், இணையத்தளங்கள் போன்ற இரண்டாம் நிலைத்தரவுகள்
பயன்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாய்வு மூலம், கல்முனை முஸ்லிம் பிரதேசசெயலக பிரிவுக்குட்பட்ட
முஸ்லிம் ஆசிரியைகள் மத்தியில் இஸ்லாமிய வங்கி பற்றிய குறிப்பிடத்தக்களவு விழிப்புணர்வு
இல்லை எனக் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இவ்வாசிரியைகள் பெரும்பாலும் இஸ்லாமியவங்கி
முறை பற்றி அறிமுக அறிவையேனும் பெற்றில்லை. இஸ்லாம் தொடர்பான விடயங்களைச்
செவிமடுப்பதில்; போதிய ஆர்வம் இன்மையால் இவ்வங்கி பற்றிய விழிப்புணர்வினைப்
பெற்றுக்கொள்ள வாய்ப்புகளை அவர்கள் பயன்படுத்த முற்படவில்லை. மற்றும் வட்டித்தொடர்பு
பரிவர்த்தனை ஏற்படுத்தும் பாதிப்புக்களை தவிர்த்தலில் அவர்கள் கரிசனை கொண்டுமில்லை.
மேலும், விழிப்புணர்வினை வழங்கக் கூடிய வினைத்திறன் மிக்க வழிமுறைகளாக,
பாடசாலைமட்டத்தில் இடம்பெறும் கருத்தரங்குகள் மற்றும் அறிவுறுத்தல் நிகழ்வுகள் என்பன
இனங்காணப்பட்டுள்ளன. இவ்வாய்வினை, இஸ்லாமிய வங்கிகள் எதிர்காலத்தில் தமது
விழிப்புணர்வூட்டற் செயற்பாடுகளை மேம்படுத்துவதற்கான வழிகாட்டியாகக் கொள்ளமுடியும். |
en_US |