Abstract:
பெண்களின் நிலைகளில் இன்று சமத்துவ உரிமைகள் என்கின்ற எண்ணக்கருவினூடாக
அவர்கள் தங்களுடைய நிலையில் இருந்தும் பல்வேறுபட்ட முன்னேற்றங்களை
அடைந்து கொண்டுதான் இருக்கின்றார்கள் என்பதற்கு இன்றைய பொது வாழ்க்கையில்
அவர்களுடைய பங்களிப்பினூடாக அறிந்து கொள்ளக்கூடியதாக இருக்கின்றமை
குறிப்பிடத்தக்க விடயமாகும். ஆரம்ப கால பெண்களின் செயற்பாடுகளுடன் இன்றைய
பெண்களினுடைய செயற்பாடுகளை உற்று நோக்குகின்றபோது இத்தகைய நிலையிளை
காணக்கூடியதாக இருக்கின்றது. 1947 ஆம் ஆண்டு இலங்கையில் இலவசக்கல்வி
(Free Education) அறிமுகப்படுத்தப்பட்டதனை அடுத்து பெண்களில் கல்வி கற்கும்
வீதம் இலங்கையில் அதிகரிக்கப்பட்டமை ஓர் முக்கியமான விடயமாகும். குறிப்பாக
இலவசக்கல்வி அறிமுகப்படுத்தப்பட்டமையானது பெண்களின் கல்வி நிலையில்
மாற்றத்தை ஏற்படுத்திய போதிலும் முஸ்லிம் பெண்களுடைய கல்வி நிலைiயில்
பாரிய மாற்றங்களை காணக்கூடியதாக இருக்கவில்லை. இலங்கையில் கல்வி
முறைமையினை நோக்கும் போது ஆரம்ப கல்வி தொடக்கம் சாதாரண உயர்தரம்
வரையான கல்வியே பிரதானமாக நோக்கப்படுகின்றது. இலங்கை வரலாற்றில்
பெண்களுடைய பொது வாழ்கை (Pரடிடiஉ டுகைந) பங்குபற்றுதலில் ஏற்பட்டுள்ள
முன்னேற்றத்தில் பிரதான பங்கினை அவர்களுடைய கல்வி நிலை பெற்று
விளங்குகின்றமை குறிப்பிடத்தக்க அம்சமாகும். இலங்கையில் முஸ்லிம்கள் செறிந்து
வாழுகின்ற கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக இஸ்லாமிய கலாசார விழுமியங்களுக்கு
அதிக முக்கியத்துவம் வழங்குகின்ற பிரதேசமாக காணப்படுவதுடன் இங்கு முஸ்லிம்
மக்கள் தங்களுடைய அன்றாட செயற்பாடுகளில் ஈடுபடுவதில் அல்லது ஏனைய
விடயங்களுக்கும் வேறுபட்ட மத கலாசார இடையூறுகள் அற்ற பிரதேசமாக
விளங்குவதனால் இங்கு பெண்களின் கல்வி விடயங்களுக்கு ஏனைய சமூக ரீதியான
தடைகள் காணப்படவில்லை என்றே குறிப்பிட வேண்டும். மாறாக இவர்களது கல்வி
நிலையை பெற்றுக்கொள்வதிவ் எத்தகைய அம்சங்கள் தடையாக அமைந்தது
என்பதனை ஆராய்வதாகவே இவ்வாய்வு அமைகின்றது. இவ்வாய்விற்குரிய ஆய்வு2
பிரதேசமாக கிழக்கு மாகாணத்தின் கோரளைப்பற்று மேற்கு பகுதியினை
அடிப்படையாகக்கொண்டே இவ்வாய்வு மேற்கொள்ளப்படுகின்றது. இவ்வாய்விற்கான
தகவல்கைளை பெற்றுக்கொள்வதற்காக ஆய்வு முறைமையாக பண்புசார்
முறைமையில் முதலாம் மற்றும் இரண்டாம் நிலைத்தரவுகளை பெற்றுக்கொள்வதனை
அடிப்படையாகக் கொண்டு இவ்வாய்வு முறைமை அமைகின்றது. முதலாம்
நிலைத்தரவுகளில் நேர்காணல் முறைமையானது இரு வேறுபட்ட குழுக்களுக்கிடையில்
அமைந்தது. அதாவது முதலாம் குழுவில் 35-25 வயதிற்குற்பட்ட பெண்கள் மற்றும் 20-
35 வயதிற்குற்பட்ட பெண்கள் என்று இருவித குழுக்களை கருத்திற்கொண்டே
ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக முதலாம் நிலைத்தரவில் நேர்காணல்
கலந்துரையாடல் போன்ற முறைமைகளை பயன்படுத்துவதுடன் இரண்டாம்
நிலைத்தரவில் நூற்கள் மற்றும் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட ஆய்வறிக்கைகள்
என்பவற்றினூடாகவே தரவுகளை பெறக்கூடியதாக இருக்கின்றது. குறிப்பாக
இப்பகுதியில் வாழுகின்ற பெண்களுடைய கல்வி நிலையிலும் விட அவர்களது சொந்த
திருமண வாழ்வில் கவனம் செலுத்துகின்ற பெற்றோர்களாகவே அதிகம் காணப்பட்டனர்.
அதுமாத்திரமன்றி இப்பகுதி வாழ் மக்கள் பெண்களுக்கு வீடு கட்டுதல் நகைகளை
சேகரித்தல் என்பதில் காட்டப்பட்ட அக்கறையினை அவர்களுடைய கல்வியில்
காட்டத்தவறிவிட்டமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.