dc.description.abstract |
குடும்பம் எனும் போது பெற்றோர்கள் பிள்ளைகள் அடங்கிய ஒரு சமூகநிறுவனமாகும்.
அந்நிறுவனத்தில் ஒவ்வொரு உறுப்பினருக்கும் தமக்கேயுரிய வகிபங்குகள்
காணப்படுகின்றன. அவற்றை திருப்திகரமாக மேற்கொள்ளும் போதே அதன்
நோக்கங்கள் பூரணப்படுத்தப்படுகின்றன. குடும்பத்தில் ஒவ்வொரு உறுப்பினருக்கும்
உரிமைகள், கடமைகள் பொறுப்புக்கள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. அவற்றை அவர்கள்
சரிவர நிறைவேற்றுவதோடு குறிப்பிட்ட சில நோக்கங்களின் பின்னணியில் சமூகத்தில்
ஏற்றுக்கொள்ளப்பட்ட அந்தஸ்த்தின் அடிப்படையில் மேலதிகமான ஒரு பணியை
சமூகத்துக்கு செய்ய முன்வரும் போது அதனால் நேர்மற்றும் மறை பிரதிபளிப்புக்கள்
தோன்றுகின்றன. இவ்வாய்வானது கேகாலை மாவட்டத்தின் ஹெம்மாதகமை
பிரதேசத்தை மையமாக வைத்து மேற்கொள்ளப்பட்ட ஒன்றாகும். தாய் இ தந்தை
பணிபுரியக்கூடிய 100 குடிகள் எழுமாறாகப் பெறப்பட்டு அதில் 10 மாதிரிகளானது எளிய
மாதிரி எடுப்பு மூலம் ஆய்வுக்குட்படுத்தப்பட்டன. இவ்வாய்வின் பிரதான நோக்கமானது
வேலைக்குச் செல்லும் பெற்றோரது (தாய், தந்தை) பிள்ளைகளின் உடலியல்,
உளவியல், மனவெழுச்சி ரீதியான நேர்மறைத் தாக்கங்களை இணங்காண்பதாகும்.
இணங்கண்ட விடயங்களை சமூகத்துக்கு வெளிக்கொணர்வதன் மூலம் உரியவர்கள்
இந்நிலைமையை மாற்றியமைக உரிய நடவடிக்கைகளை மேற்கௌ;வது மற்றுமோர்
நோக்கமாகும். ஏதிர்காலத்தில் சமூகத்துக்கு தொண்டாற்ற வேண்டிய பட்டதாரிகள் என்ற
வகையில் இந்நிலைமையை முன்னெடுத்துச்செல்வதே ஆய்வின் பிரதான இலக்காகும்.
இவ்வாய்வின்மூலம் வேலைக்குச் செல்லும் பெற்றோரது பிள்ளைகளில் உடல், உள,
மனவெழுச்சியில் நேர் மறைத் தாக்கங்கள் ஏற்படுகின்றன என்றும் தனிமையில் பல
மணித்தியாலங்களை கழிக்கும் பிள்ளைகள் பல ஆற்றல்கள் கொண்டவர்களாக
இருக்கும் அதேநேரம் சில பிறழ்வான நடத்தை கோலங்களை உடையவர்களாக
இருப்பதும் இனம் காணப்பட்டுள்ளன. இவ்வாய்வானது ஹெம்மாதகமை பிரதேசத்தில்
2015-2016 ஆம் ஆண்டின் அறிக்கையின் படி வேலைக்குச்செல்லும் பெற்றோரது (தாய்,
தந்தை) பிள்ளைகளின் தரவுகளை அடிப்படையாகக் கெண்டு அளவியல், பண்பியல்
அணுகுமுறைகளை பயன்படுத்தி தரவுகள் தொகுக்கப்பட்டன. முதலாம் நிலை தரவு
சேகரிப்பு முறையாக நேர்காணல்,அவதானம், வினாக்கொத்து போன்றவை
மேற்கொள்ளப்பட்டன. பிரத்தியோக புத்தகங்கள், சஞ்சிகைகள், கட்டுரைகள்,
இணையத்தளங்கள் என்பன இரண்டாம் நிலைத் தரவுளாக பயன்படுத்தப்பட்டன.
வேலைக்குச் செல்லும் பெற்றோரது(தாய், தந்தை) பிள்ளைகளின் நேர்தாக்கங்களை
வளர்த்து இணங்காணப்பட்ட மறைத்தாக்கங்களை இழிவளவாக்குவதன் மூலம்
ஆரோக்கியமான எதிர்காலமொன்றை காணலாம். |
en_US |