Abstract:
இஸ்லாமிய ஷரீஆ சட்டதிட்டங்களின் அடப்படையில் கட்டியெழுப்பப்பட்ட இஸ்லாமிய
வங்கி முறைமை தற்காலத்தில் முக்கியம் வாய்ந்த துறையாக காணப்பட்ட போதிலும்
இஸ்லாமிய வங்கி தொடர்பான விழிப்புணர்வு முஸ்லிம்கள் மத்தியில் எவ்வாறு
உள்ளது என்பதை இனம் காண்பதை இவ்வாய்வு நோக்கமாகக் கொண்டுள்ளது.
இவ்வாய்வானது கல்முனை முஸ்லிம் பிரதேச செயலகப் பிரவுக்குட்பட்ட கிராம
சேவையார் பிரிவுகளில் இருந்து 10 பிரிவுகள் எடுக்கப்பட்டு இவ் ஒவ்வொரு பிரிவுலும்
எழுமாறாக ஆண்கள் 5உம் பெண்கள் 5உம் தெரிவுசெய்யப்பட்டு மொத்தம் 100
நபர்களைக் கொண்ட மாதிரியாகும்.
இவ்வாய்வானது பண்பு ரீதியான தரவுகளைக் கொண்டதாக அமைந்துள்ளது. இதற்கு
முதலாம்தர, இரண்டாம்தர தகவல்கள் சேகரிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாய்வின் மூலம் கல்முனை முஸ்லிம் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட முஸ்லிம்
மக்கள் மத்தியில் இஸ்லாமிய வங்கி தொடர்பான விழிப்புணர்வு குறைவாக உள்ளது
என கண்டறியப்பட்டுள்ளது.
இந்த அடிப்படையில் இஸ்லாமிய வங்கி முறை பற்றிய வழிப்புணர்வூட்டல்
கருத்தரங்குகள், மற்றும் அறிவுறுத்தல் நிகழ்வுகள் என்பன இடம்பெறுவது
இன்றியமையாததாகும் என்பது இவ்வாய்வின் மூலம் முடிவாகப் பெறப்பட்டுள்ளது.