Abstract:
தற்காலத்தில் வறுமையை ஒழிக்குமுகமாக பல்வேறுநிதியியல்சார்
நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. அதிலும் குறிப்பாக
சிறுகைத்தொழிலிற்கான நிதியுதவிகள் உலகளாவியரீதியில் வறுமை
ஒழிப்பிற்கான பிரதான கருவியாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் மூலம்
வறுமை ஒழிப்பும் சிறுகைத்தொழில்துறை மேம்பாடும்
எதிர்பார்க்கப்பட்டுவருகின்றது. ஆகவே சிறுகைத்தொழிலிற்கான நிதிவழங்கல்
மூலம் வறுமை ஒழிப்பு மற்றும் சிறுகைத்தொழில்துறைமேம்பாடு என்பன
ஏற்பட்டுள்ளதா என்பதனைக் கண்டறியுமுகமாக, சிறுகைத்தொழிலிற்கு
நிதியுதவிவழங்கும் நிறுவனங்களைக் கொண்டதும்,சிறுகைத்தொழிலில்
கணிசமான ஈடுபாடு கொண்டதுமான கிழக்குமாகாணம், அம்பாரை மாவட்டத்தில்
அமைந்துள்ள மருதமுனை கிராமத்தை மையப்படுத்தியதாக இவ்வாய்வு
மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும்,எதிர்பார்க்கப்பட்ட அடைவ மட்டத்தினை
அடையாமைக்கான காரணங்களைக் கண்டறிவதும் இவ்வாய்வின் ஒரு
நோக்கமாக உள்ளது. இவ்வாய்வு தொகைரீதியான (ஞரயவெவையவiஎந) தரவுகளை
பயன்படுத்தியுள்ளது. இவ்வாய்வில் முதன்மைத்தரவுகள் (Pசiஅயசல னுயவய)
பயன்படுத்தப்பட்டுள்ளன. இத்தரவுகள், மருதமுனையின் மூன்று நிதிவழங்கல்
நிறுவனங்களுக்கும், நிதிபெற்ற முப்பது நபரிற்கும் வினாக்கொத்தினை
வழங்குவதன் மூலம் பெறப்பட்டன. இதன் தொகை ரீதியான தரவுகள்
ஆiஉசழளழகவழுககiஉநஇ நுஒஉநடட மென்பொருளைப் பயன்படுத்தி பகுப்பாய்வு
செய்யப்படுள்ளன. பெறப்பட்ட தரவுகளைப் பகுப்பாய்வு செய்ததில் இருந்து
நிதிவழங்கப்பட்ட நோக்கங்களான வறுமையை ஒழித்தல் மற்றும்
சிறுகைத்தொழில் துறையினைமேம்படுத்தல் என்பன ஓரளவுசிறப்பாகக்
காணப்பட்டபோதிலும் பூரணமான அடைவ மட்டத்தினைப் பெறவில்லை எனக்
கண்டறியப்பட்டுள்ளது. இதற்கான காரணங்களாக நிதிபெற்றோரது முயற்சி
போதாமை, விதவைப் பெண்கள் உதவியின்மையால் தொழிலை இடை
நிறுத்தியமை, பொருத்தமான தொழில் வழிகாட்டல் கிடைக்காமை ஆகியன
அடையாளம் காணப்பட்டுள்ளன. மேலும் இவ்வாய்வின் இறுதியில், நிதியுதவி
வழங்கல் மூலம் வறுமை ஒழிப்பு மற்றும் சிறுகைத்தொழில் விருத்தி
ஆகியவற்றை வெற்றிகரமாக அடைவதற்கான ஆலோசனைகளும்
முன்வைக்கப்பட்டுள்ளன.