dc.description.abstract |
இலங்கையில் முஸ்லிம்களுக்கான பிரத்தியேக சட்டம், அதுசார்ந்த நீதிமுறைமை நடைமுறையிலுள்ளது.
அந்நீதிப் பரிபாலனத்திற்காக காழி நீதிமன்றங்கள் நிறுவப்பட்டன. ஆயினும், முஸ்லிம் விவாகம்,
விவாகரத்து தொடர்பான நியாயாதிக்க எல்லைக் கொண்ட ‘காழி’ நீதிமன்ற முறைமை புலமைசார்
ஆய்வாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. நிறுவனப்படுத்தப்பட்ட நீதிப் பரிபாலன முறைமையில் காழி
(நீதிபதி) என்பது மிகப் பிரதான பதவி நிலையாகும். அதற்கு இஸ்லாம் வழங்கும் பெறுமானம்
அளப்பெரியது. இந்தவகையில், இலங்கை ‘காழி’களின் தகைமைகளையும் இஸ்லாமிய அறிவையும்
மதிப்பிடுதல் இவ் ஆய்வின் பிரதான குறிக்கோள்களாகும். இஸ்லாமிய முன்னோடிக் காலங்களிலும்,
பின்னரும் பிரசுரிக்கப்பட்ட நீதிப் பரிபாலனம், காழி (நீதிபதி)யின் தகைமைகள் பற்றிய ஆக்கங்களின்
மீளாய்வு, இலங்கையிலுள்ள காழிகள், வழக்காளிகள்; பெறப்பட்ட தரவுகளின் பகுப்பாய்வு,
தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுடனான நேர்காணல், கள அவதானக் குறிப்புக்களின் மீளாய்வு என்பவற்றின்
மூலம் இக்குறிக்கோள் அடையப்பட்டது. இஸ்லாம் விதந்தரைக்கும் சட்டம், அதன் விடயப்பரப்பு, மூல
ஆவணங்கள் பற்றிய அறிவை, சிந்தனாத் திறனை உள்ளிட்ட கல்வித் தகைமைகளை இலங்கை காழிகள்
கொண்டவர்கள் இல்லை. பெண்கள் ‘காழி’களாக செயற்படும் அங்கீகாரம் தொடர்பில் இஸ்லாமிய
சட்டத்தினதும்; முஸ்லிம்களதும் ஒப்புதல் இன்மை காணப்படுகிறது என்பது இவ்வாய்வின் பிரதான
கண்டறிதல்களாகும். தற்கால காழி நீதிமன்ற முறைமையின் சிறந்த கட்டமைப்பிற்கு அல்லது
மீள்புனர்நிர்மானத்திற்கு இவ்வாய்வு வழிகாட்டியாக அமையவல்லது. |
en_US |