Abstract:
பெண்களும் ஆண்களும் சமமானவர்கள். தமது உரிமைகளையும் கடமைகளையும் அனுபவிக்கத் தகுதியானவர்கள்.
ஆனால், அவற்றை விடுத்து இன்று பெண்கள் பல்வேறு வழிகளில் வன்முறைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.
அந்தவகையில், சம்மாந்துறையின் மலையடிக்கிராமம் 1, 2, 3, 4 ஆகியவற்றில் 1666 குடும்பங்களையும், 7288
சனத்தொகையையும் கொண்டு காணப்படுகிறது. இவற்றில் 6 வீதமான குடும்பங்களைத் மாதிரியாகத் தெரிவு செய்து
100 வினாக்கொத்துக்கள் கொடுக்கப்பட்டு தகவல் பெறப்பட்டது. பெற்றுக்கொண்ட தகவல்களின் அடிப்படையில்
இப்பிரதேச பெண்கள் சமூக, பொருளாதார, கலாச்சார குடும்ப போக்கு ரீதியாகவும் அவர்களது ஆற்றல், திறன்கள்
முடக்கப்பட்ட நிலையிலும் வன்முறைக்குட்படுத்தப்படுகின்றனர். பெண்களை ஊக்கமளித்து பராமரிக்க வேன்டிய
சமூகம் அவற்றை விடுத்து மேம்பாடு, அறிவு, சுகபோக உரிமை, போன்றவற்றில் ஆணாதிக்கப் போக்கு அதிகரித்து
பெண்கள் வன்முறைகளும் அதிகரித்துள்ளது;;;;;. வன்முறையின் வடிவங்களை விளங்காது நாளாந்தம் பெண்கள்
பாதிக்கப்பட்டு வருகின்றமை ஆய்வுப் பிரச்சினையாகும். இவ்வாய்வின் நோக்கங்களாக, பெண்களின் வன்முறை
வடிவங்களை அடையாளங்கண்டு அவர்கள் எதிர்நோக்கும் சவால்களை வெளிப்படுத்துவதாகவும், இவ்வன்முறைகளில்
இருந்து மீள்தீர்வுகளை முன்வைப்பதாகவும் அமைகிறது. இவ்வாய்வின் பிரதான ஆய்வு முறையிலான
புள்ளிவிபரவியல், விபரணமுறை, நேர்காணல், வினாக்கொத்து, நேரடி அவதானங்கள், போன்ற 1ம்
நிலைத்தரவுகளையும் 2ம் நிலைத்தரவுகளான பொலீஸ் நிலைய, காழி நீதிமன்ற அறிக்கைகள்
பயன்படுத்தப்படவிருக்கிறது. இவ்வாய்வினூடாக கண்டுபிடிப்புக்களாக உரிமையியல் ரீதியில் சமூக
வாழ்க்கைத்தளங்களான வீடு, குடும்பம், சமூக நிறுவனங்களின் வன்முறைகளைச் சந்திக்கின்றனர். பால்நிலை
ரீதியாக ஓரங்கட்டப்பட்டும் பெண்களின் திறமைகள் மழுங்கடிக்கப்பட்டும் ஆண்களையே முன்னுரிமைப்படுத்தல்,
கணவன் மனைவியை போதைக்கு அடிமையாக்குதல் முறையற்ற பாலியல் வல்லுறவு, அடிப்படை உரிமைகள்
தலைமைத்துவம் உயர்கல்வி போன்றன வழங்காமை, பொருளாதாரப் பிரச்சினைகளைச் சுட்டிக்காட்டி மனைவியை
அடித்தல், தீர்மானம் எடுத்தலிலும் குடும்ப பொருளாதார சமூக நிலைமைகளிலும் இரண்டாம் நிலைக்கு பெண்களை
நோக்குதல், சிறுமியர், பெண்கள் வேலையாட்களாக பயன்படுத்தல் ஆணுக்கான வகிபங்கில் மேலாதிக்கம், வார்த்தை
ரீதியான வன்முறைகளும் சொந்தங்களை சந்திக்க விடாமையும் பெண்களின் தேவையை புரியாமையும், உளவியல்
ரீதியான பெண்களை வெறுத்தலும், தொழில் ரீதியில் சம்பளக் குறைப்பும் கூடுதல் வேலையும் வன்முறையுடன்
ஊழியச் சுரன்டல் என பல்வேறு வன்முறைகளை பெண்கள் சந்திக்கின்றனர் இவ்வகையான வன்முறைகளில் இருந்து
மீள உரிமையியல் சமூக கலாசார விடையங்களில் அபிவிருத்தியினை, சட்டங்களைப் பேணுமாறு தூண்டும் பல்வேறு
தீர்வுகளை முன்வைப்பதாகவும் இவ்வாய்வு அமைகிறது.