Abstract:
மக்களது தேவைகளின் அதிகரிப்புக்கேற்ப அவற்றின் நிறைவேற்றுகை அதிகம் உணரப்படுகின்றது. அரசாங்கத்தின்
நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் சென்றடைய அரசாங்கத்தின் பிரதான செயற்பாட்டாளர்களாக உள்;ராட்சி
மன்றங்கள் காணப்படுகின்றன. உள்ளுராட்சி மன்றங்கள் எனும் போது மாநகர சபை, நகரசபை, பிரதேசசபை என்பன
உள்ளடங்கும். இருப்பினும் குறித்த மன்றங்களின் சேவை வழங்கலானது குறித்த பிரதேசத்தின் பெரும்பான்மை
மக்களை மையப்படுத்தியே நிறைவேற்றப்படுகின்றது. இதனால் சிறுபான்மையினர் பாதிக்கப்படுகின்றனர்.
அந்தவகையில், கல்முனை மாநகர சபையில் பிரதானமாக முஸ்லிம்கள், தமிழர்கள், பறங்கியர்கள், சிங்களவர்கள்
என பல்லின மக்கள் வாழ்கின்றனர். இதில் சிறுபான்மையினரான தமிழ், சிங்கள பறங்கிய மக்கள் பெரும்பான்மை
சமூகத்தினரை விட சேவைகளைப் பெற்றுக் கொள்வதில் பின்தங்கிய நிலையிலேயே உள்ளதோடு அதனைப் பெற்றுக்
கொள்ளும் வீதமும் குறைவாகக் காணப்படுகின்றது. எனவே, கல்முனை மாநகரசபைக்குட்பட்ட சிறுபான்மையினர் ஏன்
பின்தங்கிய நிலையில் உள்ளனர்? இதனால் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் யாவை? சவால்கள் யாவை?
என்பதை அறிதல் ஆய்வுப் பிரச்சினையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இவ்வாய்வானது, மாநகர சபையின்
பொதுச்சேவை வழங்கலைப் பெற்றுக்கொள்வதில் சிறுபான்மையினர்; எந்நிலையில் காணப்படுகின்றனர் என்பதை
கண்டறிவதோடு அவர்கள் எதிர்நோக்கும் சவால்களை இனங்கண்டு அவற்றின் நிறைவேற்றுகை தொடர்பிலும்
குறித்த மாநகர சபையின் அசமந்தபோக்கு தொடர்பிலும் தெளிவுபடுத்துவதை நோக்காக கொண்டது.
இவ்வாய்வானது, பண்பு மற்றும் அளவு ரீதியான விவரணப் பகுப்பாய்வாக காணப்படுவதுடன் இதற்கான தரவுகள்
முதலாம் மற்றும் இரண்டாம் நிலை தரவுகளிலிருந்து பெறப்பட்டுள்ளன. முதலாம் நிலை தரவுகளில்; பண்பு ரீதியான
நேர்காணல்இ வினாக்கொத்துஇ மற்றும் இலக்க குழு கலந்துரையாடல் என்பன காணப்படுகின்றன. நேர்காணல் 6
எழுமாறாக தெரியப்பட்ட மாதிரிகளிலிருந்தும் வினாக்கொத்துக்கள் 32 மாதிரி எடுப்பின் மூலமும் தெரிவு
செய்யப்பட்டு தரவுகள் திரட்டப்பட்டுள்ளன. இரண்டாம் நிலை தரவுகளாக நூல்கள், சஞ்சிகைகள், இணையத்தளம்,
அறிக்கைகள் என்பவற்றின் மூலம் சேகரிக்கப்பட்டுள்ளன. விவரண ரீதியாக அட்டவணைகள், வரைபடங்கள்
பயன்படுத்தி ஆய்வு முடிவுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. பெறப்பட்ட தரவுகளைப் பகுப்பாய்வு செய்ததையடுத்து
உள்;ராட்சிமன்றங்கள் மக்களினதும் நாட்டினதும் அபிவிருத்திக்கும் அவசியமான ஒன்றாக காணப்படுவதோடு
பொதுச் சேவை வழங்கலை மக்களுக்கு சிறப்பான முறையில் அனுபவிக்க உதவும் வகையில் அமைய வேண்டும்.
எனினும்இ பொதுச் சேவை வழங்கலின் போது நடைமுறையில் சிறுபான்மையினர் பக்கச்சார்பு, காலதாமதம், நெகிழ்வுத்
தன்மை இன்மை போன்ற பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கின்றனர். இந்நிலையை மாற்றியமைத்து
மாநகரசபையின் பொதுச்சேவை வழங்கலை சிறுபான்மையினருக்கு சரியான முறையில் பெற்றுக் கொள்ள
வழியமைப்பதன் மூலம் இது தொடர்பாக மக்கள் மத்தியில் சாதகமான பார்வையை ஏற்பத்த முடியும்.