Abstract:
ஆசிரியத் தலையங்கங்கள் எப்போதும் சமகாலப் பிரச்சினைகளையும் சமுதாய சீர்கேடுகளையும் சர்ச்சைக்குரிய
நாட்டு நடப்புக்களையும் ஆராய்ந்து அவற்றினை விளக்கவும் விமர்சிக்கவும் பரிந்துரைக்கவும் பாராட்டவும்
செய்கின்றன. ஆசிரியத் தலையங்கங்களை வாசிக்கத் தூண்டுவது ஆசிரியத் தலையங்கங்களின் தலைப்பே ஆகும்.
ஆசிரியத் தலையங்கங்களின் தலைப்புக்கள் ஆசிரியத் தலையங்கத்தின் சாராம்சத்தை கூறுவதாகவும் ஆசிரியத்
தலையங்கத்தினை ஓரிரு வழிகளில் விளக்குவனவாகவும் அமைகின்றன. அந்தவகையில் பத்திரிகைகள் தமது
ஆசிரியத் தலையங்கங்களுக்கு தலைப்பிடுகையில் எவ்வாறான உத்திகளை கையாளுகின்றன என்பதினையும் எந்த
முறையினை பின்பற்றுகின்றன என்பதினையும் கண்டறிதலே இவ்வாய்வின் நோக்கமாகும். இந்த ஆய்வானது 2014
கார்த்திகை மாதம் முதல் 2015 மாசி மாதம் வரையான நான்கு மாதங்களினை கால எல்லையாக கொண்டு
அமைந்துள்ளது. இந்த ஆய்வின் முதலாம் நிலைத் தரவுகளாக குறிப்பிட்ட நான்கு மாதங்களில் வெளிவந்த ஆசிரியத்
தலையங்கங்கள் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளதோடு இரண்டாம் நிலைத்தரவுகளாக இவ்வாய்வுப் பொருண்மையோடு
தொடர்புடைய கட்டுரைகளும், ஆயு;வுக் கட்டுரைகளும் நூல்கள் மற்றும் ஆய்வு நூல்கள் போன்றன
எடுத்தாளப்பட்டுள்ளன. இந்த ஆய்வானது, ஆசிரியத் தலையங்கங்களின் தலைப்புக்களை அடிப்படையாக
மேற்கொள்வதினால் ஒப்பிட்டாய்வு மற்றும் பகுப்பாய்வு முறைகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒரு
பத்திரிகையின் நோக்கத்தையும் பின்னணியையும் பணியினையும் அதன் ஆசிரியத் தலையங்கம் விளக்குவதினால்,
ஆசிரியத் தலையங்கம் மிகவும் முக்கியமான ஒன்றாக விளங்குகின்றது. ஆகவே ஆசிரியத் தலையங்கம் எழுதும்
போது மிகவும் கவனத்தில் கொள்ள வேண்டிய விடயம் அதன் தலைப்பாகும். அதுவே ஆசிரியத் தலையங்கத்தின்
சாராம்சமாகும்.