Abstract:
நாட்டின் முதலீட்டிற்குத் தேவையான நிதிவளம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சேமிப்பிலிருந்து பெற்றுக்
கொள்ளப்படுகின்றது. உள்நாட்டுச் சேமிப்புக்களில் தனியார் சேமிப்புக்களை அதிகரிப்பதனுர்டாக பொருளாதார
வளர்ச்சி மற்றும் அபிவிருத்தியை அடைந்து கொள்ள முடியும். இத்தனியார் சேமிப்புக்களில் பொது மக்கள்
அனைவரினதும் சேமிப்புக்கள் உள்ளடங்குவதால் மக்களிடையே சேமிக்கும் திறனை அதிகரிப்பது
அவசியமாகவுள்ளது. இவ்வாய்வு குறைந்த வருமான மட்டத்திலுள்ள மக்களின் சேமிப்பு நடத்தை தொடர்பாக
இலங்கையின் வடபிராந்தியத்தில் யுத்தப் பாதிப்புக்குள்ளான கிளிநொச்சி மாவட்ட, கரைச்சி பிரதேச செயலாளர்
பிரிவிற்குட்பட்ட நான்கு கிராம சேவையாளர் பிரிவிலிருந்து எழுமாற்று மாதிரி எடுப்பின் அடிப்படையில் தெரிவு
செய்யப்பட்ட 66 குடும்பங்களிடம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆய்வுப் பிரதேசத்தில் குறைந்த வருமான மட்டத்திலுள்ள
மக்கள் சேமிப்பினை மேற்கொள்ள சாதகமாக உள்ள காரணிகள், வாழ்க்கைத்தர அபிவிருத்தியில் சேமிப்பின் தாக்கம்,
வாழ்க்கைத்தரம் மீதான ஏனைய காரணிகளின் பங்களிப்பு என்பவற்றை அறியும் நோக்கிலான கருதுகோள்கள்
முன்வைக்கப்பட்டு இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. கருதுகோள்களை பரீட்சிப்பதற்காக சேகரிக்கப்பட்ட முதலாம்,
இரண்டாம் நிலைத்தரவுகள் ளுPளுளு மற்றும் நுஒஉநட மென்பொருட்களின் துணையுடன் விபரணப் புள்ளிவிபரவியல் மூலம்
பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளது. தேவையான இடங்களில் இணைவுக் குணகம், பிற்செலவு, குறுக்குவெட்டுத் தரவுகள்
போன்ற நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.இவ்வாய்வில் குறைந்த வருமான மட்டக் குடும்பங்கள் சேமிப்பதற்கு
சாதகமாக வருமானமும் வேலைவாய்ப்பும் இனங்காணப்பட்டதுடன் நுகர்வு மற்றும் கடன்கள் குறைந்தளவு
பங்களிப்பையே செய்கின்றன. சமூக காரணிகளான கல்வி, மருத்துவம், வீட்டு வசதி, போக்குவரத்து, தொடர்பாடல்
என்பனவும் நேரான தாக்கத்தையே செலுத்துகின்றன. குடித்தொகைக் காரணிகளான குடும்பப் பருமன், தங்கி
வாழ்வோர் வீதாசாரம் என்பனவும் சாதகமாகவே காணப்படுகின்றன. ஆயினும் அரசியல் காரணியானது
எதிர்க்கணியமாகவுள்ளது. இக் குறைவருமான குடும்பங்களின் வாழ்க்கைத்தரம் மீது சேமிப்பு அதிக தாக்கம்
செலுத்துவதனால், சேமிப்பினை அதிகரிக்கும் வகையிலான கொள்கைகளை அமுல்படுத்துவது அவர்களது
வாழ்க்கைத்தரத்தை சிறப்பாக அமைத்துக் கொள்ளவும் அரசாங்கத்தின் மீள்கட்டுமான செலவினைக் குறைக்கவும்
உதவுமென இவ்வாய்வு பரிந்துரை செய்கின்றது.