Abstract:
இலங்கை முஸ்லிம் தனியார் சட்டம் என்பது இலங்கை முஸ்லிம்களுக்குரிய தனித்துவமான சட்டமாகும். இச்சட்டத்தின்
ஊடாக திருமணம், விவாகரத்து, வக்பு தொடர்பாக எழும் பிரச்சினைகளைத் தீர்க்க முடியுமாக உள்ளது. இச்சட்டம்
குறித்த இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர்களின் கருத்து நிலை எவ்வாறு உள்ளது
என்பதைக் கண்டறிதல் இவ்வாய்வின் பிரதான நோக்கமாகும். பண்பு ரீதியான ஆய்வு முறையிலமைந்த இவ்வாய்வு,
தென்கிழக்குப் பல்கலைக்கழக முஸ்லிம் மாணவ, மாணவிகளின் எழுமாறாக 100 பேரிடம் இது தொடர்பான
வினாக்கொத்து வழங்கப்பட்டு தரவுகள் பெறப்பட்டு பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளன. கிடைக்கப்பட்ட தகவல்களின்படி
பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் பெரும்பாலான மாணவர்கள் இது தொடர்பான அறிவைப் பெறவில்லை. ஆனால்,
முஸ்லிம் தனியார் சட்டம் ஒன்று இருப்பதை மட்டும் அறிந்துள்ளார்கள். இருந்த போதிலும் உலமாக்களின்
பிள்ளைகள் மற்றும் மத்ரஸாவில் கல்வி கற்று இப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மௌலவி மாணவர்கள்,
மாணவிகள் இது தொடர்பான அறிவைப் பெற்றிருக்கின்றனர். எனவே, இத்தனியார் சட்டம் தொடர்பான அறிவை இப்
பல்கலைக்கழக மௌலவி அல்லாத மாணவர்கள் மற்றும் மாணவிகள் தெரிந்து கொள்வதற்கான வழிகாட்டல்கள்,
முன்மொழிவுகளைத் தருவதாகவும், எதிர் காலத்தில் இவ்விடயத்தில் ஆய்வை மேற்கொள்வோருக்கு உதவுவதாகவும்
இவ்வாய்வு அமைகிறது.