Abstract:
தனிமனித முன்னேற்றம், ஆளுமை, பொருளாதாரம் போன்றவற்றில் தேவைக் கோட்பாடு தொடர்பான உளவியல்
சார்ந்த விசாரணை மிக முக்கியமானதாகும். கார்ல் மார்க்சும் தனது சிந்தனைகளிலும் தனது சமூக
வியாக்கியனங்களிலும் தேவைக் கோட்பாட்டினை முக்கியத்துவப்படுத்தியுள்ளார். தேவைகளின் நிறைவு, அதன் சமூக
பாத்திரம் மற்றும் அந்நியமாதல் பற்றியும் மார்க்ஸ் கூறியுள்ளார். சமூகத் தேவைகளை அடிப்படையாகக் கொண்டே
மனிதர்களின் ஆற்றல் கட்டமைக்கப்படுகின்றது என்பது மார்க்ஸின் கருத்தாகும். தேவை என்னும் உணர்வை
அடிப்படையாகக் கொண்டே மனிதர்கள் தம்மைக் கட்டமைத்து வந்துள்ளனர் என்பது பிந்திய மார்கஸியர்களின்
கருத்தாகும். மானிட வரலாற்றில் மனிதர்கள் தம்மைக் கட்டமைத்துக் கொள்ள தேவையை ஒரு ஊடகமாகப்
பயன்படுத்தியுள்ளனர் என்பதை பிந்திய மார்க்;ஸியர்களும் அழுத்திப் பேசியுள்ளனர். தற்கால மார்க்ஸிய சிந்தனைகள்
தேவைகளையும் அது தொடர்பான மனிதர்களின் உற்பத்தி ஆளுமையையும் ஒருங்கிணைத்துப் பேசுகின்றன. மனிதத்
திறன் வடிவமைப்பில் தேவைக் கோட்பாடு பெறும் இடம் என்ன என்பதை வெளிக்காட்டுவது இவ்வாய்வுக் கட்டுரையின்
நோக்கமாகும். வரலாற்று ரீதியாக மனித தேவைக் கட்டமைப்பு தனது வடிவத்தையும், உற்பத்தியையும் மாற்றிக்
கொண்டுள்ளதையும் நவீன உற்பத்தி உலகு, பொருள் உற்பத்தி மூலம் நுகர்வோரின் தேவையை அடிப்படையாகக்
கொண்டே இயங்குகின்றது என்பதையும் இவ்வாய்வு தெளிவுபடுத்த முற்படுகின்றது. இவ் ஆய்விலே பிரதானமாக
பகுப்பாய்வு, ஒப்பீட்டு, விமர்சன முறையியல் பயன்படுத்தப்பட்டுள்ளதுடன் தரவுகளாக இரண்டாம் நிலைத் தரவுகளே
பயன்படுத்தப்படுகின்றன. மார்க்ஸினால் விவாதிக்கப்பட்டு எழுதப்பட்ட விடயங்கள் பிரதானமாகவும் அவருடைய
சிந்தனைகள் குறித்து எழுந்த ஏனைய நூல்கள், இணையத்தளக் கட்டுரைகள், பருவ இதழ்களில் வெளியான
கட்டுரைகள் என்பவற்றையும் ஆதாரமாகக் கொண்டே இவ்வாய்வு அமைகின்றது. மார்க்ஸியத் தேவை தொடர்பான
கண்ணோக்கும் இன்றைய உலகின் தேவை தொடர்பான பார்வையும் எவ்வாறு மாற்றமடைந்து வந்துள்ளது
என்பதையும் மெய்யியலிலுள்ள அதற்கான பிரத்தியேக அர்த்தத்தையும் பரிசீலனையையும் இவ்வாய்வில்;
காணமுடியும்.