Abstract:
சமகால வணிக சூழலில் நிறுவனங்களின் இருப்பினைத் தீர்மானிக்கும் சக்தியாக விளம்பரங்கள் மாறியுள்ளமையை
காணலாம். விளம்பரம் ஊடாக ஒரு பொருளின் அறிமுகம், தரம் என்பவற்றை நுகர்வோர் அறிந்து கொள்கின்றனர்.
இதனால் வணிக நிறுவனங்கள் இலாபநோக்கம், உற்பத்திப் பொருட்களின் தரத்தினை மேம்படுத்திக் காட்டும்
வகையில் பல்வேறு தந்திரோபாயங்களை பின்பற்றி விளம்பரங்களை வடிவமைக்கின்றன. இந்நிலையால் “விளம்பரம்
இல்லையேல் வியாபாரம் இல்லை” எனுமளவிற்கு சமகால வணிக நடவடிக்கைகளில் விளம்பரம்
ஒன்றித்துப்போயுள்ளது. விளம்பரங்கள் ஊடகங்களில் காட்சிப்படுத்தப்பட்டு நுகர்வோரின் தேவையை திருப்திகரமான
முறையில் நிறைவேற்றாத சந்தர்ப்பத்தில் ஒழுக்கமீறல்கள் தொடர்பான விடயங்கள் ஆய்வுக்குட்படுத்தப்படுகின்றன. இப்
பின்னணியில் வியாபார சூழலில் விளம்பரங்கள் வணிக நடவடிக்கைகளில் எவ்வாறான வழிகளில் ஒழுக்கமீறுகைகளை
ஏற்படுத்துகிறது. என்பதனை ஆராய்வதாகவே இவ்வாய்வு அமைந்துள்ளது.