dc.description.abstract |
ஒரு சமூகமானது அதனுடைய பண்பாடுகள் மூலமே அடையாளப்படுத்தப்படுகிறது. அத்தகைய பண்பாடுகள், பாரம்பரிய
சம்பிரதாயங்கள் காலமாற்றத்துடன் நவீனமயமாக்கம், வெளிநாட்டு வேலை வாய்ப்பு, இஸ்லாமிய மயமாக்கம், பூகோள
மயமாக்கம் போன்ற காரணங்களால் தானும் மாறிவிடுவதனால் அப்பிரதேச மக்களுக்கு அது ஓர் சவாலாக
மாறிவிடுகின்றது. இறுதியில் அப்பாரம்பரிய அம்சங்கள் மறைந்து எதிர்கால சந்ததியினர் அதுகுறித்து சிறிதேனும் அறியாத
ஓர் சூழ்நிலையும் உருவாகும் துர்ப்பாக்கிய நிலைமையும் சாத்தியமாக முடியும். பொதுவாக வாழ்வியல் பண்பாடுகள்;
சமூக, பொருளாதார, சமய ரீதியில் இவ் ஆய்வுக் கட்டுரையில் நோக்கப்பட்டுள்ளது. இவற்றின் ஆரம்ப கால ஆரோக்கிய
நிலைமையும் தற்கால இரங்கத்தக்க நிலையும் இங்கு விமர்சனக் கண்ணோட்டத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளது. நவீனத்தில்
மோகம் கொண்டு தன்னிலை மறந்து தன்னின உயர்வு வாதத்தையும் மறந்து அயலினப்பற்று வாதத்தினால் மக்கள்
நவீனத்துவ மோகம் கொண்டு தத்தமது தனித்துவத்தை இழந்து வாழ்ந்து வருகின்றனர். இதனால், இது சமூகவியல்
ஆய்வுப்பரப்பில் முக்கியத்தும் பெறுகின்றது. இவை குறித்து பல ஆய்வுகள் துறைசார் அறிஞர்களால்;
மேற்கொள்ளப்பட்டுள்ளன. இத்தகைய பண்பாட்டு அம்சங்கள் அதனுடைய பண்பாட்டு வடிவினை இழந்து வெறும்
சம்பிரதாயத்துக்காக மேற்கொள்ளப்படும் வெறும் சடங்குகளாக மாறி வருகின்றன. இப் பண்பாடுகளை மதித்து பேணி
வந்த ஆய்வுப் பிரதேச மக்களுக்கு இந்நிலை பெரும் சவாலாக அமைகின்றது. இளந் தலைமுறையினர் பெரும்பாலும்
பாரம்பரியமான வாழ்வியல் பண்பாடுகளை ஒரு பொருட்டாகப் பாராது புறக்கணிக்கின்ற நிலையும் சாத்தியமாகியுள்ளது.
புராதன வாழ்வியல் பண்பாடுகளில் காணப்படுகின்ற நன்மை தீமைகளை பகுத்தறியும் அளவிற்கு கூட பக்குவமற்ற
நிலையினை மேற்கதேயே அந்நிய கலாசார மோகங்கள் ஏற்படுத்தி இருக்கின்றன என்பதும் கண்டறியப்பட்ட
உண்மையாகும்.அதனால் சமூகத்தின் தனித்துவம் பாதிக்கப்படக் கூடிய அச்சுறுத்தலும் நிலவுகின்றது. இது சமூகவியல்
பார்வையில் ஆய்வுக்குரிய விடயமாகும். இதனால் இவ் ஆய்வானது சம்மாந்துறைப் பிரதேசத்தில் நிலவிவந்த பாரம்பரிய
வாழ்வியல் பண்பாட்டு அம்சங்களைக் கண்டறிவதுடன் அவை அருகியதால் தற்போது அம் மக்களால் எதிர்
கொள்ளபபடுகின்ற சவால்கள் குறித்தும் அதற்குரிய முடிவுரைகள், விதந்துரைகளும் முன்வைக்கப்பட்டுள்ளது. நோக்க
மாதிரி எடுப்பு மூலம் 42 மாதிரிகள் தெரிவு செய்யப்பட்டு நேர்காணல், இலக்குக் குழுக் கலந்துரையாடல், அவதானிப்பு
முறைகள் மூலம் முதலாம் நிலைத் தரவுகளும், இரண்டாம் நிலைத் தரவுகளை சேகரிப்பதற்காக புத்தகங்கள்,
சஞ்சிகைகள், கட்டுரைகள், பிரதேச செயலகத் தரவுகள் முதலானவை பயன்படுத்தப்பட்டுள்ளன.இறுதியாக இந்த ஆய்வின்
முடிவில் கண்டறியப்படட விடயம் என்னவெனில் வெறும் நாகரிகம் என்ற பெயரில் சுதேச வாழ்வியல் பண்பாடுகளை
மக்கள் கைவிட்டு வருவதனால் அவர்கள் உளவியல், உடலியல், சுகாதார, சமூக ரீதியாக பல சவால்களை எதிர்
நோக்குகின்றனர் என்பதும் அவைகளிலிருந்து மக்களை மீட்டதில் பல சிக்கல்கள் நிலவுகின்றன என்பதும் புலனாகின்றது.
இந்த ஆய்வுக்கட்டுரையின் முடிவில் எதிர் கொள்ளப்படும் சவால்கள் விமர்சனக் கண்ணோட்டத்தில்
நோக்கப்பட்டுள்ளதுடன் இறுதியில் சில தீர்வு நுட்ப முறைகளும் விதந்துரைக்கப்பட்டுள்ளன. |
en_US |