Abstract:
அல்குர்ஆன் இறைவனின் அற்புதங்கள் நிறைந்த பேச்சாகும் பல்வேறு மொழியியல் அற்புதங்களை இரகசியங்களைப்
போதிக்கின்ற திருமறைக்குர்ஆன் அன்று தொட்டு இன்று வரைக்கும் சவால் மிக்க ஒரு வேதமாக வாழ்ந்து வருகின்றது.
இக்குர்ஆனில் உள்ள வசனங்களை இறைவன் எவ்வித முரண்பாடுமில்லாமல் மிகவும் நேர்த்தியாகவும் தான் கூறிய
வார்த்தைகளை ஒன்றுக்கொன்று தொடர்புள்ளதாகவும் அமைத்திருப்பது அல்குர்ஆனின் மொழியியல் அற்புதத்தை
பறைசாற்டுகின்றது. திருமறைக் குர்ஆனில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொடர்பை, பொருத்தப்பாட்டை ஆய்வு
செய்வதற்கும் ஏராளமான தகவல்களை பெற்றுக்கொள்வதற்கும் இல்முல் பலாகா என்ற கலையில் ‘முராஆதுன் நளீர்’;
என்ற அம்சம் பெரிதும் உதவுகின்றது. ஆனால் முராஆதுன் நளீர் தொடர்பான ஆய்வுகள் தமிழ் பேசும் முஸ்லிம்கள்
மத்தியில் மிக மிகக் குறைவாகவே காணப்படுகின்றது. இவ்வாய்வானது ‘அல்குர்ஆனின் மொழியியல் அற்புதத்
தன்மையை வெளிப்டுத்துவதில் முராஆதுன் நளீரின் பங்களிப்பு தொடர்பாக ஆய்வு செய்கின்றது.